கால் எங்க இருக்கு.. அதை முதலில் கன்பர்ம் செஞ்சுக்கணும்.. டாக்டர் ராமதாஸ் டிவீட்!
உறுதி என்ற தலைப்பில் டாக்டர் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சென்னை: "சரியான இடத்தில்தான் காலை வைத்திருக்கிறாயா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்" என்று டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்றினை போட்டுள்ளார்.
மோடியின் சென்னை வருகை... ஒரே மேடையில் ஒன்றாக நின்று அதிமுக கூட்டணி கட்சியினர் கைகோர்க்க போகிறார்கள்!

குறிப்பாக இந்த 5 வருடத்தில் பலமுறை பாஜகவின் நிலைப்பாடுகள், செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அதிமுக கூட்டணியில் பாஜகவுடன் இப்போது இணைந்திருக்கிறார். முக்கியமாக பிரதமரை இன்று நேரில் சந்திக்க இருக்கிறார்.
இந்த நேரத்தில் ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "சரியான இடத்தில் உனது காலை வைத்திருக்கிறாயா? என்பதை முதலில் உறுதி செய்து கொள். பிறகு நிலையாகவும், உறுதியாகவும் நில்!- ஆப்ரகாம் லிங்கன்" என்று பதிவிட்டுள்ளார்.
வழக்கம்போல்தான்.. இதில் டாக்டர் யாரை சொல்கிறார்? காலை சரியாக வைத்திருக்கிறோமோ என்றால், பிரதமர் வரும் சமயத்தில் இதை ஏன் சொல்ல வேண்டும்? அவசரப்பட்டு பாஜகவில் இணைந்துவிட்டோமே என்று சொல்ல வருகிறாரா? அல்லது தேமுதிக கூட்டணிக்குள் வந்துள்ளதால் "காலை சரியாக வைத்திருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்" என்று விஜயகாந்துக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா என்று தெரியவில்லை.
சரியான இடத்தில் உனது காலை வைத்திருக்கிறாயா? என்பதை முதலில் உறுதி செய்து கொள். பிறகு நிலையாகவும், உறுதியாகவும் நில்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 5, 2019
- ஆப்ரகாம் லிங்கன்
ஆனால் எல்லா பக்க கூட்டணியும் முடிந்து இன்று கைகோர்க்க போகும் நேரத்திலும் டாக்டர் இப்படி குழப்பலாமா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications