மின் கம்பிகளில் அணில்கள் ஓடுவதால் மின் தடை-அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்துக்கு ராமதாஸ் நக்கல் பதில்
சென்னை: மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின்தடை ஏற்படுகிறது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பல நகரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்பது தற்போதைய திமுக அரசின் விளக்கம்.

மேலும் இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும் போது அதில் அணில்கள் ஓடும். அந்த அணில்கள் ஓடும் போது இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என கூறியிருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த கருத்தை டாக்டர் ராமதாஸ் விமர்சித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்!
சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications