சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்- உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சென்னை: சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும் #StopOnlineSexualAbuse #PROTECTOURCHILDREN


Click it and Unblock the Notifications
