ஏன்டா.. நாய்ங்களா.. 100 தடவை சொல்லிட்டேன்.. இனி வெட்டுவோம்.. பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த ராமதாஸ்!
செய்தியாளர்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
Recommended Video
சென்னை: "100 தடவை சொல்லிட்டேன்.. ஏன் மரத்தை வெட்டினேன், எதுக்கு வெட்டினேன்னு.. ராமதாஸ்..ன்னா மரம் வெட்டியா? ஏன்டா.. நாய்ங்களா.. இன்னும் அசிங்கமா திட்டணும்" என்று செய்தியாளர்களை தரக்குறைவாக டாக்டர் ராமதாஸ் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்ப் படப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ், "வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்" என்ற தலைப்பில் கலந்து கொண்டு பேசினார்.
தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும், பலமுறை பதில் அளித்தும் மீண்டும் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் கடிந்துகொண்டார். அப்போது அவர் பேசியதுதான் இது: "டெலிகிராப்-ன்னு ஒரு பத்திரிகை. கல்கத்தாவில இருந்து வருது அந்த பத்திரிகை. அதன் நிருபர் கேக்கறான், "சார்.. மரத்தை வெட்டிட்டீங்களே என்ன?"

ஏன் கேட்கிறே?
அதுக்கு நான் சொன்னேன், இதுக்கு நான் 100 தடவை பதில் சொல்லிட்டேன். திரும்ப திரும்ப அதையே கேட்கறீங்களே.. என்ன நோக்கத்திற்காக கேட்கறீங்க? ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டறவன்னு தெரியாத மக்களுக்கும் திரும்ப திரும்ப தெரியப்படுத்தனும்தானே இந்த கேள்வியை கேட்கிறே?ன்னு நான் திருப்பி கேட்டேன்.

வெட்டிட்டு போயிடுவேன்
இனிமே ஏதாவது போராட்டம் பண்ணா, மரத்தை எல்லாம் வெட்ட மாட்டோம், இப்படி கேள்வி கேக்கற ஆளை வெட்டி போட்டுட்டு அப்பறம் போராட்டம் பண்றோம்னு சொன்னேன் (பலத்த கைதட்டல்). உடனே எழுந்துட்டான், என்ன ஐயா இப்படி பேசறீங்கன்னு கேட்டான். பின்னே என்ன?

மரம் வெட்டியா?
100 தடவை கேட்டாச்சு இதையே. இன்னொருத்தன் கூலா சொல்றான், 101-வது தடவை பதில் சொல்லுங்களேன்னு சொல்றான். அப்போ மக்களுக்கு 101-வது தடவையும் நான் ஏன் மரத்தை வெட்டினேன், எதுக்கு வெட்டினேன்னு தெரியணுமா? ராமதாஸ்...ன்னா மரம் வெட்டி??

அறக்கட்டளை
ஏன்டா.. நாய்ங்களா.. இன்னும் அசிங்கமா திட்டணும்.. நான் வச்ச மரத்தை வந்து பாருங்கடா. ஒரு லட்சம் ரூபாய் பரிசு தரேன்னு சொல்லி இருக்கேன். எந்த நாய்ங்களும் வந்து பார்க்கலை. நான் வச்ச மரத்தை யாரும் பார்க்கல. வனமே வெச்சிருக்கன் அறக்கட்டளையில!

போராடி இருக்கான்
சண்டாள பசங்களா.. எதுக்கு இதை சொல்றேன்னா, இந்த படைப்பாளிகள் பேரியக்கம் மூலமாக நம்ம நோக்கத்தை நம்ம மக்கள்கிட்ட கொண்டு செல்வோம். நாம எந்த மக்களுக்கும் எதிரானவர்கள் கிடையாது. எந்த சாதி, மதத்துக்கும் எதிரானவர்கள் கிடையாது. எல்லாருக்காகவும்தான் இந்த ராமதாஸ் போராடிட்டு இருக்கான்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications