சக்திகள் என்று எதை சொல்கிறார்.. ஒத்த டிவீட்டில் மீண்டும் தெறிக்க விடும் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டிற்கான விளக்கம் தெரியவில்லை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கம்போல ஒரு பழமொழியை பதியவிட்டு, அத்தனை பேரின் தலையையும் சுத்த விட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!!

வரப்போகும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் தயாராகிவிட்ட நிலையில், பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பது பாமகதான். இன்னும் எதைப்பற்றியும் அறிவிப்பு, பேட்டி, விளக்கம் என எதுவுமே வரவில்லை. ஆனால் தவறாமல் அக்கட்சி நிறுவனர் ராமதாசின் பழமொழி ட்வீட்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது.

அதிமுகவுடன் பாமக கூட்டு சேரப்போவதாகவும், அதற்காக சீட் சம்பந்தமான முதல்கட்ட பேச்சுவார்த்தைகூட நடந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை

புரியவில்லை

புரியவில்லை

யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் எப்போது அறிவிப்பார் என்பதில் 3 மாத காலமாக ஆர்வம் அதிகரித்துள்ளது. காரணம், அவர் போட்டு வரும் டிவீட்டுகள். பல ட்வீட்களில் சமுதாய சாடல்களையும், தமிழர்களின் பாதுகாப்பை பற்றியும் வெளிப்படையாக சொன்னாலும் சில ட்வீட்கள் தலைதெறிக்க ஓட வைத்து விடுகின்றன.

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன்

இந்த ட்வீட்களில் பொன்மொழியை சேர்த்து பதிவிடுவதுதான் ராமதாசின் ஹைலைட்டே!! ஆப்ரஹாம் லிங்கன், வில்லியம் பட்லர் யீட்ஸ் என்ற வெளிநாட்டுக்காரர்கள் சொன்ன பொன்மொழிகளை உதிர்த்து வந்தவர், அதில் பொடி வைக்கவும் தவறுவதில்லை.

உலகம் இருட்டு

இப்போது நம்ம ஊருக்குள் நுழைந்து, சுவாமி விவேகானந்தரின் ஒரு பொன்மொழியை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்த அகிலத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஏற்கனவே நம்மிடம் வந்து விட்டன. ஆனால், நாம் தான் நமது கைகளால் கண்களை மூடிக் கொண்டு இந்த உலகம் இருளில் மூழ்கிவிட்டதாக கதறிக் கொண்டிருக்கிறோம்!- சுவாமி விவேகானந்தர்" என்று தெரிவித்துள்ளார்.

பாமக? அதிமுக?

பாமக? அதிமுக?

அதிமுக-பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில்,"சக்திகள்" என்று ராமதாஸ் யாரை சொல்கிறார்? அதிமுகவையா? அல்லது பாமகவையா? கண்களை மூடிக் கொண்டு இருட்டு என்று சொல்வது யார்? அதிமுகவா? பாமகவா? எதுவுமே புரியவில்லை. எப்பவுமே ஒத்த ட்வீட்டை போட்டு ஓட விடுவதில் ராமதாசுக்கு நிகர் அவரேதான்!!

நீங்க கலக்குங்க மருத்துவரே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+