குஷ்புவின் ’இந்த’ கோபம் ரோஷம் பாஜக எம்பிக்கு எதிரான 'அந்த’ போராட்டத்தின் போது வரலையே?டாக்டர் ஷர்மிளா
சென்னை: திமுகவின் பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணத்தின் சர்ச்சை பேச்சுக்காக பாஜக நடிகை குஷ்பு வெளிப்படுத்துகிற கோபம், பாஜக எம்பிக்களுக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின் போது ஏன் வெளிப்படவில்லை என டாக்டர் ஷர்மிளா கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவில் தலைமை கழகப் பேச்சாளர்களில் ஒருவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. எதிர்க்கட்சியினரை மிக இழிவாக மேடைகளில் பேசுவதால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

தற்போதும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக நடிகை குஷ்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என பலரையும் மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் விமர்சித்திருந்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அவரது இந்த ஆபாசப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாஜக உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் மேடையில் பேசும் போது கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக பெண்கள இழிவாக பேசுகின்றனர். பெண்களை பற்றி யார் இழிவாகப் பேசினாலும் அவர்களது தாய், தந்தையை இழிவாகப் பேசுவதற்கு சமம். நீங்கள் உங்களைப் பெற்ற அம்மாவை இப்படி கேவலமாக பேசுவீர்களா? அவர்கள் பேசுகிற பாஷையில் என்னால் பதில் தர முடியும். ஆனால் என் வளர்ப்பு அவ்வளவு மோசமானது அல்ல.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே! உங்கள் கண்ணைப் பார்த்து பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது. திமுகவினர் அனைவருக்கும் சொல்கிறேன்.. இந்த குஷ்புவை சீண்டிப் பார்க்காதீர்கள். இந்த குஷ்பு பதில் கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது என கொந்தளித்திருந்தார்.

குஷ்புவின் இந்த கண்டன பேட்டி ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனிடையே நடிகை குஷ்புவின் கோபத்துக்கு சமூக ஆர்வலரான டாகர் ஷர்மிளா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அப்பதில் விவரம்: கரெக்ட்டா சொன்னீங்க
@khushsundar மேடம் ... ஆனா இந்த கோபமும் ரோஷமும் ஏன் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் உங்கள் கட்சி எம்.பி யை எதிர்த்து போராடும் வீராங்கனைகளுக்காக வரவில்லை ?! இத்தனைக்கும் நீங்கள் தேசிய மகளிர் ஆணையத்தின் பிரதிநிதி ?!
உங்களுக்கு வந்தா மட்டும் தான் ரத்தமா? இவ்வாறு டாக்டர் ஷர்மிளா சாடியுள்ளார்.

மேலும் இவர் பேசுனது தப்பு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.ஆனா இதைவிட உங்களை கேவலமாக பேசுன @HRajaBJP மற்றும் ஒரு பொம்பள அண்ணன் தம்பி இருவரையும் வச்சிருக்கா என்று கேவலமாக பேசிய மாநில தலைவர்
@annamalai_k இருக்கும் கட்சியில இருந்துகிட்டு இதை நீங்க கேட்கிறது தான் வேடிக்கையாக இருக்கு எனவும் டாக்டர் ஷர்மிளா பதிவிட்டுள்ளார்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications