ஆபரேஷன் பண்ணி நாளாயிடுச்சே.. செந்தில் பாலாஜி ஏன் டிஸ்சார்ஜ் இல்லை? கேட்பது ஷியாம் கிருஷ்ணசாமி
சென்னை: செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் குறித்து அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட காவேரி மருத்துவமனைக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், சீராக நடந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகும் ஒரு மாதம் உள்நோயாளியாக வைத்து Bill ஐ தீட்டி அனுப்புவது தான் காவேரி மருத்துவமனை வழக்கமா என ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அரசுப் பணத்தில் செந்தில்பாலாஜிக்கு மட்டும் சிறப்புச் சிகிச்சையா என விமர்சித்துள்ளார்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்த தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவருக்கு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் 3 குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவு மூலம் காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்பட்டார். அங்கு 8 நாட்கள் ஓய்வில் இருந்த அவருக்கு ஜூன் 21ஆன் தேதி அதிகாலை இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது காவேரி மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே இவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு மீதான விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. இன்னும் 3 நாட்கள் கழிந்தால் வரும் 14ஆம் தேதியுடன் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒரு மாதம் நிறைவு பெறுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications