கருணாநிதி சிலை திறப்பு விழா கூட்டம்... விரட்டி விரட்டி டிவீட் போட்ட தமிழிசை!
சென்னை: சென்னையில் இன்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் பேசப் பேச அதை விமர்சித்து டிவீட் போட்டுக் கொண்டே வந்தார் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோரது பேச்சுக்களை வைத்து அவர் அடுத்தடுத்து லைவாக டிவிட் போட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த டிவீட்டுகளுக்கு திமுக, காங்கிரஸாரும் அடுத்தடுத்து பதில் போட டிவிட்டரே சூடாக காணப்பட்டது. தமிழிசை போட்ட டிவீட்டுகள்:
|
இதுதான் குடும்ப அரசியல்
கோபாலபுரத்து குடும்பமும் நேரு குடும்பமும் மீண்டும் இணைந்தது என்று பேசுகிறார் துரைமுருகன்.....மக்களோடு மக்கள் இணைந்தால் மக்களாட்சி ...குடும்பத்தோடு குடும்பம் இணைந்தால் குடும்ப ஆட்சி....மக்கள்புரிந்து கொள்வார்கள்......நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி என்று......
|
கூடிக் கூவுகிறார்கள்
மத்தியில் இருக்கும் ஆட்சியினால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளோம்.....ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு...உண்மைதான் ஊழல்வாதிகள் கறுப்புப்பணமுதலைகள் வெளிநாட்டில் சொத்தை பதுக்கியவர்கள் குடும்ப ஆட்சியாளர்கள்தான் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டார்கள் ஓடிஒளிந்தார்கள்..கூடி கூவுகிறார்கள்
|
யாரை வைத்துக் கொண்டு ரிமோட்
மன்மோகன்சிங் அவர்களை பிரதமராக்கி முன்னிறுத்தி பின்புறமிருந்து ரிமோட் மூலம் 10 ஆண்டுக்காலம் இயக்கிய. காங். தலைவி சோனியா மேடையில் வைத்துக்கொண்டு @ncbn உரை
|
இனப்படுகொலையை மறந்துட்டீங்களே
திமுக-காங்.காலத்து சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின் அவர்களே...இலங்கைத்தமிழர்களை இறுதிப்போரில் அழித்து ஒழிக்க துணைநின்றதை சொல்ல மறந்ததேன்?....?
|
எத்தனை முறை கூட்டி வந்தீர்கள்
4ஆண்டுகளில் மோடி அவர்கள் பலமுறை தமிழகம் வந்துள்ளார்கள்.ஐக்கிய முண்ணனி 10 ஆண்டுகால ஆட்சியில் எத்தனைமுறை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் தமிழகம் வந்தார்கள் ?இயற்கைப்பேரிடர் வந்த நேரங்கள் உட்பட.கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு எத்தனைமுறை கூட்டிவந்தீர்கள்?
|
மோடி விமர்சனம்தான் அதிகம்
தமிழை செம்மொழி ஆக்க எடுத்த முயற்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பங்களிப்பை மறக்க முடியுமா?மறைக்கமுடியுமா?சிலைதிறப்பு விழாவில் ஸ்டாலின் உரையில்..கலைஞரை விமர்சையாக...பேசியதைவிட மோடியை..விமர்சனமாக பேசியதே அதிகம்.கலைஞர் புகழ் இசை பாடியதைவிட மோடி இகழ் வசை பாடியதே அதிகம்...
|
அக்கா நேரலையில் பார்த்துள்ளார்
கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்வை மு.க அழகிரி நேரலை பார்த்தாரே இல்லையானு தெரியாது..!! அக்கா தமிழிசை நேரலை பார்த்தார் என்பது மட்டும் தெரியும்..!!.. இது அல்ட்டிமேட் கமெண்ட்!
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications