"நான் போட்டாச்சு.. நீங்க போட்டாச்சா".. தமிழிசை போட்ட புது வீடியோ.. ஆதரவு தரும் ட்விட்டர்வாசிகள்
தடுப்பூசி குறித்து தமிழிசை சவுந்தராஜன் விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டுள்ளார்
சென்னை: தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது...
இதற்காக தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டமும் அந்த மாநிலத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.

ஆளுநர்
2 நாளைக்கு முன்புகூட, இது தொடர்பான கருத்தரங்கிலும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டார். சுதந்திர தினத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்த கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

அறிவுரை
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சலுகைகளை அறிவித்து ஊக்கப்படுத்த வேண்டும், அப்போது தான் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துவார்கள்., எனவே, அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என்று தடுப்பூசி குறித்து தமிழிசை சவுந்தராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
Recommended Video

பதிவு
அந்த வகையில் தற்போதும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் தமிழிசை பேசியதாவது: "தடுப்பூசி நான் போட்டாச்சு.. நீங்க போட்டாச்சா.. தடுப்பூசியை நான் போட்டாச்சு.. நீங்க போட்டாச்சா? போட்டுக் கொள்ளவில்லை என்றால் உடனே சென்று போட்டுக் கொள்ளுங்கள்.. ஏனென்றால் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஆயுதம்தடுப்பூசி..

ட்வீட்
தடுப்பூசிகளால் எந்த பக்கவிளைவுகளும் வராது.. தடுப்பூசியினால் எந்தவித அபாயகரமான விளைவுகளும் வராது.. ஆனால், கொரோனாவில் அபாயகரமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்..உடனே செல்லுங்கள்.. தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்" என்று தமிழிசை சொல்கிறார்.. இந்த விழிப்புணர்வு வீடியோவை தன்னுடைய ட்வீட்டில் தமிழிசை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை பலரும் வரவேற்று, தமிழிசையின் கருத்து ஆதரவு தந்து வருகின்றனர்..!
-
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
கள்ளக்காதல் + 2 கோடி காப்பீடு.. கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா.. மனைவியின் மாஸ்டர் பிளான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications