அக்கா ஏதாச்சும் சொல்லுங்கக்கா எனக்கு.. வணக்கம் தம்பி.. வாழ்க வளமுடன்!
சென்னை: செம செம.. டாக்டர் தமிழிசை.. ரொம்ப வித்தியாசமான தலைவர்.. தமிழக மக்களின் பாசக்கார "அக்கா". திட்டினாலும், பாராட்டினாலும் தமிழக மக்களின் பாச மழையில்தான் நனைகிறார் தமிழிசை. இதோ இப்போது கூட ஒரு தம்பிக்கு தனது அன்பைப் பொழிந்துள்ளார் பாருங்கள்.
வாஜ்பாயைப் பார்க்கும்போதெல்லாம் மக்கள் மத்தியில் ஒரு விதமான மென்மையான பார்வை வந்து விடும். காரணம், அவருக்கு மக்கள் தங்களது மனதில் சாப்ட் கார்னரைக் கொடுத்திருந்தனர்.
அதேபோலத்தான் தமிழகத்தில் தமிழிசைக்கு ஒரு அன்பான இடத்தைக் கொடுத்துள்ளனர் மக்கள். விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும் கூட தமிழிசையிடம் பாசம் காட்டும் கூட்டமும் ஜாஸ்திதான்.

பாசம் காட்டும் மக்கள்
எச். ராஜா போன்றோரெல்லாம் மக்கள் மனதில் என்ன மாதிரியான பெயரை சம்பாதித்து வைத்துள்ளனர் என்று தெரியாது.. ஆனால் தமிழிசை மீது பாசப் பாய்ச்சல்தான் அதிகம். அவரை தனிப்பட்ட முறையில் சிலர் திட்டினாலும் கூட அதையும் ஜாலியாக எடுத்துக் கொண்டு கலக்குபவர் தமிழிசை.
|
தமிழிசையின் வாழ்த்து
அப்படிப்பட்ட தமிழிசை இன்று இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி சி46 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்து கூறி ஒரு டிவீட் போட்டிருந்தார். அதற்கு ஒருவர் வித்தியாசமான பதிலைக் கொடுத்திருந்தார்.
|
பதில் சொல்லுங்கக்கா
அன்பு அக்கா நீங்கள் பதில் எதாச்சும் சொல்லுங்க. உங்க தொண்டனாகிய எனக்கு வணக்கம் சொல்லுங்கள் என்று அந்த தொண்டர் கூறியிருந்தார்.. அடடா இம்புட்டு பாசமா கேக்குறாரே.. அதுவும் எவ்வளவு உரிமை பாருங்கள். இதற்கு தமிழிசை பதில் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் பதில் வந்து விழுந்து விட்டது.
|
தம்பிக்கு வணக்கம்
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன்.. இதுதான் தமிழிசை போட்ட பதில். அக்கா என்று அகம் மகிழ அழைத்த அந்த தொண்டருக்கு தமிழிசை கொடுத்த பதில் உண்மையிலேயே நெஞ்சைத் தொட்டிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் அதையும் கூட சிலர் வந்து கிண்டலடித்துக் கொண்டிருக்கத்தான் செய்கின்றனர்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications