இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க சூப்பர் பானங்கள்.. டாக்டர் தீபாவின் அட்வைஸ்
சென்னை: இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரு பானங்களின் தயாரிப்பு முறைகளை கைநுட்ப மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் தீபா விளக்கியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், இந்த கொரோனா காலத்தில் இயற்கையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிமுறைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
நாம் இரு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, இன்னொன்று மன அழுத்தத்தை எப்படி குறைப்பது. இயற்கையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகாவும் உணவும் பயன்படுத்தலாம்.

தண்ணீர்
இவை இரண்டும் இரு கைகள் போன்றது. இதை செய்தால் கொரோனாவிலிருந்து நாம் மீள்வதற்கும் வராமல் தடுக்கவும் உதவும். நிறைய பேர் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். இதை குறைக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுதான் முக்கியம், அதிலும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.

தினமும் தண்ணீர்
சராசரியாக ஒரு மனிதன் 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் சத்து குறைந்தாலே நம் உடல் அமிலத் தன்மையாகிவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தொற்று எளிதில் நம் உடலில் பரவ உதவுகிறது. இதிலிருந்து விடுபட நாம் ஒரு நாளைக்கு 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது போல் கொரோனா நோயாளிகள் சுடுநீரை குடித்து வர வேண்டும்.

தோல் நீக்கிய இஞ்சி
இயற்கையான இரு பானங்களை நாம் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். ஒன்று அரை துண்டு பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம். அதிலிருந்து ஒரு 50 எம்எல் சாரை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய இஞ்சி சாறு 50 எம் எல், கைப்பிடி அளவு துளசி இலைகளின் 20 எம்எல் சாறு, 5 எம்எல் எலுமிச்சை சாறு ஆகியவற்றை 100 முதல் 150 மில்லி தண்ணீரில் மஞ்சள் தூளுடன் கலந்து கொதிக்க விடவும்.

இரு வேளை
விட்டமின் சியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஒவ்வொரு செல்லில் இருக்கக் கூடிய கழிவுகளை நீக்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மஞ்சளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வைரஸுக்கு எதிரான தன்மை கொண்டதாக விளங்குகிறது. இந்த பானங்களை காலையும் மாலையும் இரு வேளைகள் எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி
இன்னொரு பானம் எப்படி செய்வதை என்பதை பார்ப்போம். அதிமதுரம் 5 கிராம். 150 முதல் 200 மில்லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் தோல் நீக்கிய இஞ்சியை இடித்து 5 கிராம் அளவில் எடுத்து கொள்ளலாம். 10 துளசி இலை, கால் தேக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை 100 எம்எல் அளவுக்கு தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நம் உடலில் கிருமிகளோ வேறு ஏதேனும் ஒவ்வாத வைரஸ்களோ உள்ளே சென்றால் அதை எதிர்க்க உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கலாம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications