கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி.. டாக்டர் ஒய் தீபா டிப்ஸ்
சென்னை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், அஜீரண கோளாறுகளை எப்படி தடுக்க வேண்டும் என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா கூறுகையில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நெஞ்சு எரிச்சல் இருப்பதாக கூறுவார்கள். இது முதல் 3 மாதங்களிலேயே ஆரம்பித்துவிடும். இந்த பிரச்சினை ஒன்பதாவது மாதம் வரை இருக்கும். கர்ப்பமாக இருக்கும் போது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். மலச்சிக்கல், இடுப்பு வலி, அஜீரண கோளாறு ஆகியவை இருக்கும். ஆனால் 9ஆவது மாதம் வரை நமக்கு தொடர்வது எது என்றால் அது நெஞ்சு எரிச்சல்தான்.
இது ஏன் வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் கருவுறும் போது நம் உடலில் அதிகமான ஹார்மோன்கள் சுரக்கும். குறிப்பாக பிரோஜஸ்ட்ரோன் மற்றும் ரிலாக்ஸின் (Relaxin) ஆகிய இரு ஹார்மோன்களும் அதிகமாக சுரக்கும். மென்மையான திசுக்கள் எங்கு இருக்கிறதோ அதை எல்லாம் ரிலாக்ஸ் செய்யும். குறிப்பாக உணவு மண்டலத்தில் இருக்கக் கூடிய மியூகஸ் லேயர் எனும் மென்மையான திசுக்களை இந்த ஹார்மோன் ரிலாக்ஸ் செய்யும்.

ஹார்மோன்
இதனால் நாம் எந்த உணவு உண்டாலும் வயிற்றிலிருந்து உணவு மேலே வருவது போல் இருக்கும். ஜீரண பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இந்த ஹார்மோனானது வயிற்றில் இருக்கக் கூடிய உணவை உணவு குழாய்க்கும் (ஈசோபேஜஸ்) மேல் நோக்கி தள்ளிவிடும். இது வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரணமாவது லேட்டாக நடக்கும் போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஊட்டச்சத்துகள்
ரத்தநாளங்களில் ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படும் போது குழந்தைக்கு நஞ்சுக் கொடி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊட்டச்சத்து போய் சேரும். நெஞ்சு எரிச்சல் ஏன் நடக்கிறது என்றால், உணவு குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள பகுதியை ஹார்மோன் ரிலாக்ஸ் செய்துவிடும். இதனால் ஜீரணத்துக்கு காரணமான ஜூஸ்கள், அமிலங்கள் என அனைத்தும் வயிற்றிலிருந்து உணவுக் குழாய்க்கு மேல் நோக்கி தள்ளும்.

மென்மை
இந்த அமிலங்கள் என்ன செய்யும் எனில், மிகவும் மென்மையாக உள்ள உணவுக் குழாயில் ஒரு எரிச்சலை கொண்டு வரும். இதனால்தான் நமக்கு நெஞ்சு எரிச்சல் வருகிறது. உணவுக் குழாயானது நமது இதயம் இருக்கக் கூடிய இடத்தில் இருக்கிறது. இதனால் தான் இதை Heart Burn என சொல்கிறோம். ஆனால் இதுக்கும் இதயத்திற்கும் எந்த பிரச்சினையும் கிடையாது.

கர்ப்பிணிகள்
இந்த நெஞ்சு எரிச்சல் பிரச்சினையை கர்ப்பிணிகள் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலமாக மிகவும் எளிதாக தீர்வு காணலாம். எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதை நன்றாக மென்று உண்ண வேண்டும். அப்போது நமது வாயில் எச்சில் அதிகமாக சுரக்கும். அப்போது வயிற்றில் சுரக்கும் அந்த ஆசிட்டை நடுநிலைப்படுத்தும்போது நெஞ்சு எரிச்சல் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

இரவு நேரம்
இதற்கு நாம் சில பாதாம் கொட்டைகளை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இரவு நேரத்தில் 5 பாதாம்களை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தோலை நீக்கிவிட்டு உண்ண வேண்டும். கர்ப்பிணிகள் மட்டுமல்ல , அனைவரும் பாதாமை ஊறவைத்து மறுநாள் எடுத்துக் கொண்டால் அதற்கான பலன்கள் அதிகமாக இருக்கும். ஏன் தோல் நீக்க வேண்டும் என்றால் அதில் இருக்கக் கூடிய நார்ச்சத்துகள் நமது ஜீரண மண்டலத்துக்கு எரிச்சலை கொடுக்கும்.

உணவு ஜீரணமாகாதது
இதனால் வாந்தி வருவது போன்ற உணர்வையும் உணவு ஜீரணமாகாதது போன்ற உணர்வையும் கொடுக்கும். பாதாமை ஊற வைக்கும் போது அது முளைவிடும். அப்போது அதனுடைய புரத சக்தி பன்மடங்கு அதிகமாகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய புரதத்தையும் மாற்றும். அடுத்தது பால் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பால் குடிப்பது அவசியமானதாகும்.

நெஞ்சு எரிச்சல்
அந்த பாலில் பாதாம், முந்திரி ஆகியவற்றை வறுத்து பொடித்து கலந்தும் நாம் குடிக்கலாம். இதனுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம். இதனால் குழந்தையின் வலிமைக்கும் கால்சியத்தை வலுப்படுத்தவும் உதவும். அது போல் நெஞ்சு எரிச்சல் வராமல் தடுக்க இது உதவும். மேலும் வேற எப்படியெல்லாம் இந்த நெஞ்சு எரிச்சலையும் வாந்தி வரும் உணர்வையும் நிறுத்தலாம் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக உணவை சாப்பிடலாம்.

டீ காபி வேண்டாம்
காலை உணவு, பழங்கள்,சத்து மாவு கஞ்சி, வெஜிடபிள் சூப் ஆகியவை எடுத்துக்கலாம். இரவு நேரத்தில் சீக்கிரம் உணவை உட்கொள்ளலாம். நாம் அடுத்தடுத்து உணவு உட்கொள்ளும் போது ஆசிட் சுரத்தல் நடுநிலையாகிவிடும். ஆவியில் வேகவைத்த உணவுகளையும் உட்கொள்ளலாம். நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். முதல் 3 மாதங்கள் யோகபயிற்சிகளை செய்யலாம். இதனால் சுகப்பிரசவம் நடக்கும். காரம், எண்ணெய் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். டீ, காபி, சுகர் ஆகியவற்றை நிறுத்திவிட வேண்டும்.

ஜீரண சுரப்பி
சோடா, பாட்டில் ஜூஸ்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க வேண்டாம். அது நமது ஜீரண சுரப்பிகளை நீர்த்து போக செய்யும். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம். ஒரு நாளைக்கு நாம் 3 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தை உழன்று கொண்டிருக்கும் அம்னாட்டிக் புளூயிட் அளவை மெயின்டெய்ன் செய்ய இது உதவும். ஜீரண பிரச்சினை இருந்தால் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை குடியுங்கள்.

முட்டை
கர்ப்பிணிகள் அதிக அளவில் இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். வறுத்த கொட்டைகள், கோதுமை சப்பாத்தி, அதிகமாக பருப்பு சேர்ப்பது ஆகியவற்றை தவிர்க்கலாம். முட்டையை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கீரையை எடுத்துக் கொள்ளலாம். எப்போது உட்கார்ந்தாலும் நிமிர்ந்து உட்கார வேண்டும். நெஞ்சு எரிச்சலை கட்டுப்படுத்த 2 அல்லது 3 தலையணைகளை போட்டு சாய்வாக படுத்துக் கொள்ளலாம்.

வாந்தி
சிறிது நேரம் வாக்கிங் போகலாம். லெமன், நெரோலி , ஆரஞ்ச் ஆகிய அரோமா எண்ணெய்களை குளிக்கும் பக்கெட்டில் 2 அலல்து 3 சொட்டுகளை விட்டு குளிக்கலாம். கைக்குட்டைகளில் ஒன்று முதல் இரண்டு சொட்டு விட்டு நுகரலாம். நல்ல ரிலாக்ஸ்டாக உணருவோம். அது போல் வாந்தி வருவது போன்ற உணர்வும் ஏற்படாது.

அழுத்தம்
அடுத்தது அக்குபிரஷர் செய்து கொள்ளலாம். சில புள்ளிகளில் நாம் அழுத்தம் கொடுப்பதால் நெஞ்சு எரிச்சலை நாம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அதாவது கைகளில் மணிக்கட்டு அருகே 3 விரல்களை வைத்துக் கொண்டு அங்கிருந்து 3ஆவது விரல் முடியும் இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம். அது போல் மூக்கிற்கு கீழ் மேல் உதடுக்கு நடுப்பக்கத்தில் ஒரு அழுத்தம் கொடுத்தாலும் இந்த நெஞ்சு எரிச்சல் பிரச்சினை தீரும். வஜ்ராசனம், தாடாசனம், திரியக தாடாசனம், நாடி சுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் ஆகிய யோகாக்களை செய்து நெஞ்சு எரிச்சலை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம் என்றார் தீபா.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications