Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொங்கி போன தொப்பையை சரி செய்ய.. உடல் எடையை குறைக்க.. இதை செய்ங்க போதும்.. டாக்டர் ஒய் தீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடின உடற்பயிற்சியில்லாமல் கடும் டயட் இல்லாமல் உடல் எடையையும் தொப்பையையும் எப்படி குறைக்கலாம் என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மருத்துவர் ஒய் தீபா விவரித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலமாக உடல் பருமனை எப்படி குறைக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக தொப்பையை குறைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

இயற்கை மருத்துவம் கூறும் டயட்டை பின்பற்றினால் போதும் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். எடையை குறைக்க வேண்டும் என நம் மனதில் உறுதியாக இருக்க வேண்டும். உடல் பருமனால் பல நோய்கள் நமக்கு ஏற்படும்.

 கொலஸ்டிரால்

கொலஸ்டிரால்

உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் அளவு அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறையவே உள்ளன. பெண்களுக்கு நீர் கட்டிகள், ஹைப்போ தைராய்டிஸம் ஆகியவை ஏற்படுகிறது. கார்போஹைட்ரேட்டையும் கொழுப்பையும் விட்டு விடுத்து அதிகமாக புரத உணவுகளை எடுத்து கொள்வதால் சிறுநீரக பாதிப்புகள் அதிகரிக்கும்.

 எளிமையான டயட்

எளிமையான டயட்

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில் எளிமையான டயட் சார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ரெகுலராக பாலோ செய்வதன் மூலம் நமது உடல் பருமனை எளிதாக பராமரிக்கலாம். இதனுடன் சூர்ய நமஸ்காரம், புஸங்காசனம், நவ்காசனம், தனுராசனம், ஜானுசிரசாசனம் ஆகிய ஆசனங்களை செய்யும் போது தொப்பை குறையும். தேவையில்லாத கொழுப்புகளும் எளிதில் ஜீரணமாகிவிடும்.

 எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு, தண்ணீர், தேன் ஆகியவற்றை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அரை எலுமிச்சையை சாறு எடுத்து 2 டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இந்த எலுமிச்சை ஜீரண மண்டலத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள் ஜீரணமாகிவிடும்.

 சர்க்கரை அளவை சீராக்கும்

சர்க்கரை அளவை சீராக்கும்

இதை ரெகுலராக 40 நாட்கள் எடுத்து வந்தால் போதுமானது. அது போல் பட்டை பொடியையும் தேனையும் கலந்து எடுத்துக் கொள்ளலாம். இதையும் 40 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். சுடுநீரில் பட்டை பவுடரை கால் டீஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து அதில் தேன் கலந்து எடுத்து கொள்ளலாம். சுகர் கிரேவிங்கை குறைக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்துகிறது.

 ரத்த ஓட்டத்திற்கு உதவும்

ரத்த ஓட்டத்திற்கு உதவும்

தேனுடன் கலந்து இவற்றை குடிப்பதால் வயிறு சுத்தப்படுத்தப்படும். இதனால் எளிதில் எடை குறையும். சமையலில் நிறைய பூண்டை சேர்த்து கொள்ளலாம். கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும். பூண்டில் இருக்கக் கூடிய சல்பூரிக் அமிலம் உடலுக்கு சீரான அமைப்பை கொடுக்கும். ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

 கருஞ்சீரகம்

கருஞ்சீரகம்

ஒரு கிளாஸ் தண்ணீரில் கால் டீஸ்பூன் வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை கொதிக்க வைத்துவிட்டு 2 சிட்டிகை ஓமம் சேர்த்துக் கொள்ளலாம். இதை மாலை வேளைகளில் டீ, காபிக்கு பதிலாக குடிக்கலாம். இது தொப்பையை குறைக்கும். இதை 20 நாட்கள் எடுத்தால் போதும். கருஞ்சீரகம் இருப்பதால் இதை நிறைய நாட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 மைதா

மைதா

சர்க்கரை, மைதா, உப்பு ஆகியவற்றை கட்டாயம் நாம் தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு தண்ணீர் 3 முதல் மூன்றரை லிட்டர் வரை குடித்துக் கொண்டே வர வேண்டும். உடலில் தண்ணீர் நிறைய இருந்தால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக ஜீரணமாகும். நிறைய நார்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் கொலஸ்டிராலையும் மெயின்டெய்ன் செய்யலாம். அதிகமாக உடல் பருமன் இல்லாமலும் பார்த்து கொள்ளலாம்.

 உடல் சதைகள்

உடல் சதைகள்

தினமும் 6 முதல் 8 மணி நேரம் நிச்சயம் தூங்க வேண்டும். சீரான தூக்கமும் ஆரோக்கியமான டயட்டும் இருந்தாலே போதுமானது. உடல் சதைகள் தொங்கி போனால் நாம் உண்ணும் உணவு அதே இடத்தில் கொழுப்பாக தேங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சந்தோஷமாக இருந்தால் உடல் எடை கூடாது. வாரத்தில் ஒரு நாளாவது பழங்களை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளலாம். இடுப்பு குளியலும் எடுத்துக் கொண்டால் நமது உடல் பருமனை எளிதாக குறைக்கலாம் என்றார் டாக்டர் ஒய் தீபா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+