மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் கிட்ட வந்துவிட்டது.. பிரதான கட்சிகள் ஜரூரான களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாள் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் கட்சிகளுடன் தொகுதி பங்கீடும் ஒருவழியாக முடிந்துவிட்டது. தற்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை?.... ஒதுக்கப்படும் தொகுதிகளில் வேட்பாளர் யார்?..என முடிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், காட்பாடி தொகுதியின் அரசியல் களமானது ஒரு முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அதை பற்றின ஒரு பிரத்யேக தகவல்தான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது..!!

காட்பாடி தொகுதியில் யார் வேட்பாளர் என்பது தான் திமுகவின் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது. காட்பாடி என்றாலே அமைச்சர் துரைமுருகன் தான்... துரைமுருகன் என்றாலே காட்பாடி தான். நிலைமை இப்படி இருக்க வரும் தேர்தலில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுவாரா என விவாதமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

Tamil Nadu Assembly Election 2026

காட்பாடி தொகுதி

காட்பாடி தொகுதியில் முதன் முதலாக 1971ம் ஆண்டு துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதற்கு அடுத்ததாக 1991 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய துரைமுருகன் 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2021 வரை தொடர்ந்து ஆறு முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.

டாப் சீனியர் லீடர் துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிட்ட பெரும்பாலான தேர்தலில் அதிமுக வேட்பாளரை தான் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் காட்பாடி தொகுதியை பொருத்தவரை துரைமுருகனுக்கு எப்போதுமே வெற்றி முகம் தான். ஆனால் இந்த சட்டமன்றத் தேர்தலில் வயது முதிர்வை காரணம் காட்டி துரைமுருகனுக்கு காட்பாடி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற பேச்சு பரவி வருகிறது.

ஆனாலும் காட்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்க துரைமுருகன் ஆர்வமாக உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. நிலைமை இப்படியிருக்க தன்னை "காட்பாடி தொகுதி வேட்பாளர்" என அழைக்க வேண்டாம் என துரைமுருகனே திமுகவினர் மத்தியில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருமகள் யார்?

வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி விரும்புவதாகவும், அவரின் விருப்பத்திற்கு ஏற்ப பெரும்பாலான தொகுதிகளில் இளைஞர்களை களம் இறக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அப்படி பார்த்தால் துரைமுருகனுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான் என்கிறார்கள் சில உடன்பிறப்புகளே.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் கே வி குப்பம் மற்றும் காட்பாடி தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன், "நீங்கள் என்னை காட்பாடி தொகுதி வேட்பாளர் என்று அழைத்துப் பேசுகிறீர்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். திமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அந்த நேரத்தில் தான் வேட்பாளர் வருவார்.

உதயநிதி விருப்பம் என்ன?

உங்கள் மகிழ்ச்சிக்காக இப்போது என்னை வேட்பாளர் என அழைப்பது சரி அல்ல. நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன். இதை நான் ரசிக்கவில்லை" என்று கொஞ்சம் கடுமையாகவே பேசினாராம்.. இதைக்கேட்ட துரைமுருகனின் தீவிர ஆதரவாளர்கள் உள்ளிட்ட உடன்பிறப்புகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்களாம்..

ஒருவேளை வயது முதிர்வை காரணம் காட்டி, உதயநிதியின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு காட்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் துரைமுருகனின் மருமகள் காட்பாடி தொகுதியில் களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. இதனால் காட்பாடி தொகுதி வேட்பாளர் விவகாரத்தில் திமுக தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை உடன் பிறப்புகள் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார்களாம். மேற்கூறிய இந்த தகவல்தான் நமக்கு எக்ஸ்க்ளூசிவாக கிடைத்துள்ளது.

திமுக பலே பிளான்

அரசியல் ரீதியாக இதனை நாம் உற்று நோக்கினால், காட்பாடி என்பது துரைமுருகனின் தனிப்பட்ட செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதி என்பதால், அங்கு ஒரு புதிய முகத்தை அறிமுகப்படுத்துவது திமுகவிற்குப் பெரும் சவாலாகவே இருக்கும்.

துரைமுருகனின் இந்தப் பேச்சு தொண்டர்களிடையே தற்காலிகக் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இது ஒரு திட்டமிட்ட அரசியல் சிக்னல் என்றே தெரிகிறது.. கட்சித் தலைமையின் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் என்ற செய்தியை சொல்லும் அதேசமயம், தன் அரசியல் வாரிசுகளைக் களமிறக்கத் தயார் செய்யும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மொத்தத்தில், காட்பாடி தொகுதியின் வேட்பாளர் தேர்வில் திமுக தலைமைக்கும் துரைமுருகனுக்குமான அந்தப் பிணைப்பு, வரும் நாட்களில் எப்படிப்பட்ட டர்னிங் பாயிண்ட்டை தரப்போகிறதோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

- நமது சிறப்பு நிருபர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+