"ஜனாதிபதி தேர்தலில் உங்கள் சகோதரியை ஆதரியுங்கள்!" அதிமுகவிடம் ஆதரவு கோரிய திரௌபதி முர்மு
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு, அதிமுக தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18இல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.
அதேபோல அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகிறார்.

திரௌபதி முர்மு
இதற்காக இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். யஷ்வந்த் சின்கா இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய நிலையில், பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சென்னை வந்தார்.

அதிமுக
அதிமுக தலைவர்களை நேரில் சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரினார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக திரௌபதி முர்முவை ஆதரிக்கும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி கிளம்பும் வரை, ஓபிஎஸ் விழா மேடைக்கு வரவில்லை. அதன் பின்னர் தனியாக வந்தே ஆதரவைத் தெரிவித்தார்.

யாதும் ஊரே
திரௌபதி முர்மு எடப்பாடி பழனிசாமி இருக்கும் போது மேடையில் பேசினார். அப்போது தமிழ் மொழியின் பெருமையைக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய திரௌபதி முர்மு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் வரிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சகோதரி
மதுரை ஆதீனத்தை ஞானசம்பந்தர் நிறுவி ஆன்மீகத்தை வளர்த்தெடுத்தார் என்று குறிப்பிட்ட அவர், சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பு மகத்தானது என்றும் தமிழ்நாட்டில் இருந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டனர் என்றும் அவர் பேசினார். மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் சகோதரியை ஆதரியுங்கள் என்றும் அவர் ஆதரவு கோரினார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications