சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"திராவிடம்.!" ட்விட்டரில் ஒற்றை வார்த்தை டிரெண்டிங்கில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்.. பளீச் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: உலகெங்கும் ஒற்றை வார்த்தை ட்வீட் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்துள்ளார்,

ட்விட்டர் தளத்தில் ஒவ்வொரு முறையும் எதாவது ஒன்று டிரெண்டாகிக் கொண்டு இருக்கும். சில நேரங்களில் எப்படி ஆரம்பித்தது என்று தெரியாமல் கூட சில டிரெண்டகள் உருவாகி உள்ளன.

பெரும்பாலும் இந்த நடன சேலஞ்ச், வாட்டர் பக்கெட் சேலஞ்ச் போன்றவை தான் இதில் டிரெண்டாகும். உலக பிரபலம் தொடங்கி அனைவரும் டிரெண்டிங்கில் ஐக்கியமாவார்கள்.

அமித்ஷாவை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.. 'குஜராத்’ மேட்டர் பற்றி பேசுவாரா? ஹிண்ட் கொடுத்த அமைச்சர்!அமித்ஷாவை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.. 'குஜராத்’ மேட்டர் பற்றி பேசுவாரா? ஹிண்ட் கொடுத்த அமைச்சர்!

 புதிய டிரெண்டிங்

புதிய டிரெண்டிங்

அப்படித்தான் இன்று காலை முதல் ஒற்றை வார்த்தை ட்வீட்கள் டிரெண்டாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் மிகப் பெரிய தனியார் ரயில் சேவை வழங்கும் நிறுவனமான ஆம்டிராக், இன்று காலை தனது ட்விட்டரில் "trains" என்று ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் ரீட்வீட் செய்யப்பட்ட இந்த ட்வீட், புதிய சர்வதேச டிரெண்டிங்கை தொடங்கி வைத்தது.

 ஒற்றை வார்த்தை

ஒற்றை வார்த்தை

அமெரிக்காவின் பிரபல சிஎன்என் செய்தி நிறுவனம் "பிரெக்கிங் நியூஸ்" என்று பதிவிட்டது. அமெரிக்காவின் நேஷனல் பப்பிள் ரேடியோ நிறுவனம் ஒரே வார்த்தையில் "ரேடியோ" என்றும் நாசா "யுனிவர்ஸ்" என்றும் ட்வீட் செய்தனர். நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக ஒற்றை வார்த்தையில் விளக்க வேண்டும் என்பதே இந்த சிங்கிள் வார்த்தை ட்வீட்டின் அடிப்படையாகும்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இப்படித் தான் இன்று காலை முதலே ட்விட்டர் தளம் முழுக்க ஒற்றை வார்த்தை ட்வீட்களால் நிரம்பி உள்ளது. நிறுவனங்கள் மட்டுமின்றி தனி நபர்களும் தலைவர்களும் கூட ஒற்றை வார்த்தையில் ட்வீட்களை பதிவிட்டனர். அமெரிக்க அதிபர் பைடன், "ஜனநாயகம்" என்று ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்து இருந்தார். இந்நிலையில், இந்த சர்வதேச டிரெண்ங்கில் முதல்வர் ஸ்டாலினும் இணைந்துள்ளார்.

 திராவிடம்

திராவிடம்

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் ஒரே வார்த்தையில் "திராவிடம்" என பதிவிட்டுள்ளார். முதல்வரின் இந்த ட்வீட் வெறும் 30 நிமிடங்களில் 1200க்கும் மேற்பட்டோரால் ரீட்வீட் செய்யப்பட்டு, 4500க்கும் மேற்பட்டோரால் லைக் செய்யப்பட்டது. திராவிட மாடல் வளர்ச்சி என்பதை திமுக அரசு முன்வைத்து வரும் நிலையில், முதல்வர் ஒற்றை வார்த்தையில் "திராவிடம்" என்று ட்வீட் செய்துள்ளார்.

 தென் மண்டல கவுன்சில் கூட்டம்

தென் மண்டல கவுன்சில் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கேரளா சென்றுள்ளார். இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய உள் துறை அமைச்சகம் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தைக் கேரளாவில் நடத்துகிறது. இதில் தென் மாநிலங்களில் முதல்வர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

அதிமுக

அதிமுக

முன்னதாக இந்த ஒற்றை வார்த்தை டிரெண்டிங்கில் அதிமுக அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்தும் ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. அதிமுக செயற்குழு செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து இருந்தது. இதைக் கொண்டாடும் வகையில் அதிமுக அதிகாரப்பூர்வ பக்கத்தில், "எடப்பாடியார்" என்று ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்து இருந்து குறிப்பிடத்தக்கது.

 அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

இது தவிர வேறு சில அரசியல்வாதிகளும் ஒற்றை வார்த்தை ட்வீட் டிரெண்டிங்கில் இணைந்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு என பதிவிட்டுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக நிதி என்றும் சீமான் தமிழ்த்தேசியம் என்றும் பதிவிட்டுள்ளனர். அதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழன் என்றும் கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் சமத்துவம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

English summary
Tamilnadu CM Stalin tweets as Dravidam in his twitter: Single word tweets take over the twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X