"பக்குவமே இல்லை.. முரணான பேச்சு.!" அண்ணாமலை பற்றி கேட்டதும் வந்ததே கோபம்.. பொறிந்து தள்ளிய கி.வீரமணி
சென்னை: திராவிட கழகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் வீரமணி, பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
Recommended Video
பெரியார் 88 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய விடுதலை நாளிதழின் ஆசிரியராகத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உள்ளார். இவர் சுமார் 60 ஆண்டுகளாக விடுதலை நாளிதழ் தலைவராக உள்ளார்.
இதையொட்டி 60 ஆயிரம் விடுதலை சந்தாதாரர்களைத் திரட்டும் முயற்சியாகத் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே சந்தா திரட்டும் பணியில் வீரமணி ஈடுபட்டார்.

கி. வீரமணி
இதில் தஞ்சை எம்எல்ஏ டி. கே. ஜி. நீலமேகம், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, "ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற பெயரில் ஜனநாயகத்தை விரட்டி அடிக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஈடுபட்டு உள்ளது. இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே லாபம் நோக்கமின்றி கருத்தியல் நோக்கத்தில் இயங்கும் விடுதலையை வாசிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் இயக்கமாக இதைத் தஞ்சையில் நடத்துகிறோம்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேச்சு
திமுகவின் வரலாறு என்ன தெரியுமா? திமுக நெருப்பாற்றில் நீந்தி வரும் ஒரு கட்சி. அதன் வராலாறு எல்லாம் புதிதாக அரசியலுக்கு வந்த அண்ணாமலைக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவர் எப்போதும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர். இதற்கு ஒரு உதாரணம் தேசியக் கொடியுடன் சென்ற அமைச்சரின் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம். முதலில் இந்த விவகாரத்தில் அமைதி காத்த அவர் கண்டனம் அதிகமான பிறகு, தவறுதான் என ஒப்புக்கொண்டார். அண்ணாமலையின் ஒவ்வொரு பேச்சும் திமுகவிற்கு நூறு வாக்குகளைப் பெற்றுத் தரும் , எனவே அந்த பணி தொடரட்" டும்என்றார்.

நீட் புரிதல் இல்லை
அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை குத்தாலம் பகுதியில் திக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசுகையில், "நீட் தேர்வு என்ற பெயரில் இந்தியா முழுவதும் எப்படி ஒரே தேர்வு நடத்த முடியும். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார் எழுகிறது. ஊழல் இல்லாமல் ஒரு ஆண்டு தேர்வாவது நடைபெற்று இருக்கிறதா? ஜாதி, மத மற்றும் பதவி போதையில் இருக்கும் மற்றவர்களுக்கு நீட் குறித்த புரிதல் இல்லை.

அடகு வைத்த அதிமுக
அதிமுகவை அவர்கள் ஏற்கனவே நான்கு கூறுகளாகப் போட்டு விட்டனர். அனைத்தையும் இழுத்துப் பிடித்து பொம்மலாட்டம் போன்று ஒருவர் ஆட்டிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் இரு தரப்பினரும் மாறி மாறி நீதிமன்றத்திற்குச் செல்கின்றனர். கடைசியில் வழக்கறிஞருக்கே கட்சி செல்லும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. டெல்லியில் கட்சியை அடைமானம் வைத்த அதிமுகவினர், இப்போது அதை மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பக்குவம் இல்லை
நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசியவர்களை பாஜவே கண்டித்து இருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் கைதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற பக்குவம் கூட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இல்லையா? கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் கற்கோட்டையை நோக்கி கற்களை எறியக் கூடாது" என்று காட்டமாக விமர்சித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications