ஆளுநரை பதவி நீக்கம் செய்ய இம்பீச்மெண்ட் கொண்டுவர அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவை: கி.வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய இம்பீச்மெண்ட் கொண்டுவருவதைப் போல ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடர்பாக கி.வீரமணி பேசியதாவது: ஒரு பிரச்சினைக்குத் தீர்வு எப்படி? அடிக்கடி தலைவலி வருவதைத் தடுப்பதற் காக சாரிடான் மாத்திரையோ, ஆஸ்பிரின் மாத்திரையோ சாப்பிடுவதல்ல. அடியோடு பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், வேரிலேயே கை வைக்கவேண்டும் என்பதற் காக, அண்ணா சொன்னதை நினைவூட்டினார் நீதியரசர் சந்துரு. நீதியரசர் தீர்ப்பு எழுதினால், அது அப்பீலில் வெற்றி பெறக் கூடிய தீர்ப்பாகும். சாதாரண தீர்ப்பல்ல; சாதாரணமான தீர்ப்பல்ல என்று சொல்வதற்குக் காரணம், மக்கள் தீர்ப்பாகத்தான் அண்ணா அவர்கள் அதை சொன்னார்கள்; ''ஆட்டுக்குத் தாடி தேவையில்லை- நாட்டுக்குக் கவர்னர் தேவையில்லை!'' என்பதை அழகாக எடுத்துச் சொன்னார். அந்தப் பிரச்சினை ஒரு பக்கத்தில் இருக்கிறது; அதை நோக்கித்தான் நாம் செல்லவேண்டும். அடுத்த கட்டத் திற்குச் செல்லவேண்டும். தனித்தனியே போராடிக் கொண்டிருப்பதைவிட, எங்கே பிரச்சினை இருக்கிறதோ - நோய் நாடி நோய் முதல் நாடவேண்டும் - அதுதான் நம்முடைய அணுகுமுறை.

Dravidar Kazhagam Veeramani urges to Constitution amendment to Remove Governor

அரசமைப்புச் சட்டத்தில், அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற பிரச்சினைக்கு, முதலில் எடுத்தவுட னேயே, பீடிகை என்று சொல்லக்கூடிய முன்னுரையில் மிக அழகாக, மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. அதிகாரம் யாரிடம் இருக்கிறது? குடியரசுத் தலைவரிடத்திலா? இல்லை. நாடாளுமன்றத்திலா? இல்லை. நீதிமன்றத்திலா? இல்லை சட்டமன்றத்திலா? இல்லை. அரசமைப்புச் சட்டப்படி நான் சொல்கிறேன். நான் சொல்வது தவறாக இருந்தால் திருத்துங்கள், நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், மக்களிடம் இருக்கிறது.
We the People... இதுதான் மிக முக்கியம். மக்களுக்காகச் சட்டம் - மக்களுக்காக ஆட்சி - மக்கள் நலனுக்காக மற்றவர்கள் அரசியலில் இருக்கிறவர்கள் பணிபுரியவேண்டும்.

இந்தக் கடமையைத்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியினுடைய தலைவராக, அதுவும் இந்த ஒன்றரை ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவி லேயே இப்படி ஓர் ஆட்சி இல்லை என்ற பெருமிதத்தோடு, 'நம்பர் ஒன் முதலமைச்சர்' என்று மற்ற ஏடுகளாலும் பாராட்டப்படக் கூடிய ஒரு முதலமைச்சர் - ஒப்பற்ற திராவிட மாடலுடைய முதலமைச்சராக இருக்கக் கூடிய ஒரு முதலமைச்சர் தன்னுடைய கடமையைச் செய்தார். வேறு யாரும் செய்ய முடியாத ஒரு பணியை, அவர்கள் துணிந்து செய்தார்கள். அவர்கள் சமூக நீதியை நிலைநாட்டினார்கள்; சட்ட நீதியையும் நிலை நாட்டினார்கள்.மிக விசித்திரமான ஒரு சூழல் ஏற்பட்டது அன்றைக்கு. இதுவரை ஆளுநராக இருந்தவர்கள், உரை நிகழ்த்தினார் என்று சொல்வதைவிட, உரை யைப் படித்தார் என்று சொல்வதுதான் - மக்களுக்கு விளங்கக் கூடிய மொழியில் சொல்லவேண்டும். உரை நிகழ்த்துவது வேறு; படிப்பது வேறு. அவர்கள் சொந்தமாக எழுதிப் படித்தால், அவர்கள் உரை நிகழ்த்து கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் கையிலே கொடுத்துப் படியுங்கள் என்று சொன்னால், அவர்கள் உரையைப் படிக்கிறார்கள். படிக்கவேண்டியவர்கள் படிக்கவேண்டுமே தவிர, படிய மறுக்க- மறுத்தேன் என்று காட்டுவதற்கு, எங்கோ உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக செய்தார்கள். இது இதுவரையில் கேள்விப்படாதது. கேள்விப் படாதது மட்டுமல்ல, அவர் நடந்துகொண்ட முறை என்பது, இதுவரையில் சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாகும். நாங்கள் சட்டமன்றத்திற்கு உள்ளே எப்பொழுதுமே போவாதவர்கள்; உள்ளே போனவர்களைப் பாதுகாப்பது தான் எங்களுடைய வேலை.

Dravidar Kazhagam Veeramani urges to Constitution amendment to Remove Governor

எதிர்க்கட்சிகள்தான் இதுவரையில், ஆளுநர் உரையைப் படிக்கும்பொழுது வெளியே போயிருக் கிறார்கள்; ஆளுநரே வெளியே போனார் என்பது இருக்கிறதே, அது இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமானது. ஆளுநர் எப்பொழுது எதிர்க்கட்சியில் சேர்ந்தார் என்பது தெரியாது; ஒருவேளை அது ரகசியமாக நடந்திருக்கிறதோ என்றும் தெரியவில்லை.அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆளுநர் வெளியேறு கிறார். ''வெளியேற்று'' என்று சொன்னவர்களைப் பார்த் திருக்கிறோம். பேரவைத் தலைவர்தான் வெளியேற்றுவார்; பேரவைத் தலைவர், ஆளுநரை வெளியேற்றவில்லை; வெளியேற்றவும் மாட்டார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஆளுநர் வெளியே போனார் என்று சொன்னால், இது அசாதாரணமான சூழ்நிலையா, இல்லையா? இது ஜனநாயகமா? இதுவரையில் இப்படி நடந்ததுண்டா? என்று கேட்கிறார்களே, அவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்; சட்டமன்ற வரலாற்றில், தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் ஆளுநர் வெளியேறினார் என்று இதுவரையில் நடந்தது உண்டா?

குடியரசுத் தலைவரிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவர் வரை பதவிப் பிரமாணத்தின்போது உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்களே, அவரவர் விருப்பம் போல் எழுதிக் கொண்டு வந்து படிப்பதல்ல. அந்த உறுதிமொழி என்பது வரையறுக்கப்பட்டு இருப்பது. அப்படி வரையறுக்கப்பட்ட உறுதிமொழியினை, சட்டத் துறையில் இருக்கக்கூடிய நம்முடைய வழக்குரைஞர் சகோதரர்கள் அருள்கூர்ந்து மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அமைச்சர்கள் பதவியேற்கும்பொழுது எடுக்கின்ற உறுதிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும்பொழுது எடுக்கின்ற உறுதிமொழி, அதேபோல, மற்ற மற்ற பதவிகளுக்காக எடுக்கின்ற உறுதிமொழியைவிட, ஆளுநர் பதவியேற்கும்பொழுது எடுக்கும் உறுதிமொழி என்பது வித்தியாசமானது.குடியரசுத் தலைவரிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவர் வரை பதவிப் பிரமாணத்தின்போது உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்களே, அவரவர் விருப்பம் போல் எழுதிக் கொண்டு வந்து படிப்பதல்ல. அந்த உறுதிமொழி என்பது வரையறுக்கப்பட்டு இருப்பது. அப்படி வரையறுக்கப்பட்ட உறுதிமொழியினை, சட்டத் துறையில் இருக்கக்கூடிய நம்முடைய வழக்குரைஞர் சகோதரர்கள் அருள்கூர்ந்து மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

Dravidar Kazhagam Veeramani urges to Constitution amendment to Remove Governor

அமைச்சர்கள் பதவியேற்கும்பொழுது எடுக்கின்ற உறுதிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும்பொழுது எடுக்கின்ற உறுதிமொழி, அதேபோல, மற்ற மற்ற பதவிகளுக்காக எடுக்கின்ற உறுதிமொழியைவிட, ஆளுநர் பதவியேற்கும்பொழுது எடுக்கும் உறுதிமொழி என்பது வித்தியாசமானது. அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் 159 என்ற பிரிவின்படி Oath or affirmation by Governor
Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the senior most Judge of that court available, an oath or affirmation in the following form, that is to say swear in the name of God I, A B, do that I solemnly affirm will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well being of the people of (name of the State) இந்தப் பகுதி, மற்ற பதவிப் பிரமாணத்தின்போது எடுக்கப்படும் உறுதிமொழி போன்றதல்ல. மிக முக்கியமாக நீங்கள் கவனிக்கவேண்டியது, I will devote myself to the service and well being of the people of (name of the State) மக்கள் நலனுக்காக என்று சொல்லும்பொழுது, இத்தனை மசோதாக்களை ஊறுகாய் ஜாடியில் போடுவது மக்கள் நலனா?

குடியரசுத் தலைவர் தவறு செய்தால், இம்பீச் மெண்ட் கொண்டு வருகிறார்கள் அல்லவா! அது போன்று மாநில ஆளுநர் இதுபோன்று குறுக்குசால் ஓட்டினால், போட்டி அரசாங்கம் நடத்தினால், ஆளுநரை வெளியேற்றுங்கள் என்று சட்டப்பூர்வ மாக செய்வதற்கு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வரவேண்டும் என்பதை நான் முன்மொழி கிறேன் முதலில்; நீங்கள் கைதட்டி வழிமொழி யுங்கள்! சட்டப்படி அதை செய்யவேண்டும். மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குகிற. ஆளுநர் ஒருவர், அரசாங்கத்தினுடைய கொள்கைகளுக்கு நேர் விரோதமாக நடந்துகொள்கிறார் என்றால், அப்படிப்பட்ட நிலை நம் மாநிலத்திற்கு மட்டுமல்ல; வேறு எந்த மாநிலத் திற்கும் வரக்கூடாது; எப்போதும் வரக்கூடாது என்பதற் காகத் தகுந்த பாதுகாப்பிற்காக, அரசமைப்புச் சட்டத் திருத்தம் வரவேண்டும். இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+