உதயநிதி ஸ்டாலின் சீரிய கொள்கை வீரர், பகுத்தறிவாளர்... பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்திய கி.வீரமணி
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சீரிய திராவிட இயக்க கொள்கை வீரர்; பகுத்தறிவாளர் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்தி உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் செயல்வீரர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அவர்களுக்கு இன்று (27.11.2022) 45 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதை அறிய திராவிடர் கழகமான தாய்க்கழகம் மிகுந்த பூரிப்பும், பெருமையும் அடைகிறது. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்து மகிழ்கிறது.

கொள்கைவீரர், பகுத்தறிவாளர்
காரணம், அவர் தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக, தி.மு.க. தலைமையால் நியமிக்கப்பட்டபோது, நம்மைப் போன்ற பலருக்கு, அவரால் அப்பணியை சிறப்புடன் செய்ய முடியுமா? காரணம், ''அவர் திரைப்படத் துறையில் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளருமாக அத்தொழிலில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருப்பதால், இப்பணியில் ஆர்வமும் காட்டி, உழைப்பைத் தர முடியுமா?'' என்று அய்யப்பட்டது உண்டு.
ஆனால், அந்த எண்ணம் தவறானது என்பதை அவரது தொடர்ந்த துடிப்புமிகுந்த செயற்பாடுகள்மூலம் நிரூபித்து வருகிறார்! அதைவிட ஒரு சீரிய கொள்கை வீரராகவும், பகுத்தறிவாளராகவும் கடமையாற்றி, உழைப்பின்மூலம் நாட்டோருக்குக் காட்டி வருகிறார்!

திராவிட பாசறை பயிற்சி வகுப்புகள்
பிரச்சாரப் பணிகளைச் செம்மையாகச் செய்து, திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பொறுப்பிலும் முத்திரைப் பதித்து, அத்தொகுதி வாக்காளர்களை மனநிறைவு அடையச் செய்கிறார்! எல்லாவற்றிற்கும் சிகரம்போல, தி.மு. கழக இளைஞர்களுக்குத் திராவிடப் பாசறை அமைத்து, பயிற்சி வகுப்புகளை நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்து திராவிடக் கொள்கை நாற்றுகளை உருவாக்கும் கொள்கை உணர்வுக் கொடி பறக்க நன்கு திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைந்து வருகிறார்! திராவிடர் இயக்க வரலாற்றில் இந்தப் பணிமூலமாக முக்கியத்துவம் பெறவேண்டிய கொள்கையை இளைஞர்களுக்குப் போதித்துவிட்டால் - இயக்கம் இரும்புக் கோட்டையாகும்!

இளைஞரணி செயலாளர்
அவரை மீண்டும் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராக நியமித்ததுடன், மகளிரணி தொடங்கி எல்லா அணிகளிலும் இளைஞர்கள், வாலிபர்கள், ஆற்றலாளர்களாக அடையாளம் கண்டு புதிய பொறுப்புகளைத் தந்து, இயக்கத்தினை வேக நடை போட வைத்து, செயல்வீரர்கள், வீராங்கனைகளாக்கிடும் சிறந்த தலைமை - ஆளுமைத் திறனுள்ள இன்றைய தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை தம் அருஞ்சாதனையாக்கி நல்ல நம்பிக்கையை நாளும் வளர்த்து வருகிறார்.

உதயநிதிக்கு வாழ்த்து
பதவிகள் அல்ல; பொறுப்புகள் இவை! பதவிகள் அல்ல; பொறுப்புகள் இவை என்று உணர்ந்து, தொண்டாற்றும் நமது இளம் வீரர்களை, வீராங்கனைகளைப் பக்குவப்படுத்தி தளகர்த்தர்களாக்கிடும் பணியில் ஈடுபட்டு, வெற்றிக் கனி பறிக்க உழைக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உளம் பூரித்த வாழ்த்துகள்! அணிவகுத்து பணி முடித்து வரலாறு படையுங்கள்! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications