"கை" வைங்க பார்ப்போம்.. சூர்யாவை தொட்டால் அவ்வளவுதான்.. பாமக மீது திராவிடர் விடுதலை கழகம் புகார்
பாமகவினர் மீது திராவிடர் விடுதலை கழகம் போலீசில் புகார் தந்துள்ளது
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ஜெய்பீம் பட சர்ச்சை இன்னும் ஓயவில்லை.. படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்... இதற்கு சூர்யாவும் விளக்கம் தந்து பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

விளக்கம்
ஆனாலும் இன்னும் விவகாரம் சுற்றி கொண்டே இருக்கிறது.. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... இந்நிலையில்தான் "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி 2 நாட்களுக்கு முன்பு பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

பரிசு
"ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை மயிலாடுதுறை பகுதியில் நடமாடவிட மாட்டோம்.. இனி சூர்யா, ஃபிளைட்டில் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும்... சாலை வழியில் போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்.. சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.
அதேபோல, "நடிகர் சூர்யா நடித்து வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானால் தியேட்டர்களை கொளுத்துவோம்" என்று காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் சூர்யாவுக்கு இப்படி தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நிலையில்தான், திராவிடர் விடுதலை கழகம் சூர்யாவுக்கு சப்போர்ட்டுக்கு வந்துள்ளது. சூர்யாவை தாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்மண்டல காவல்துறை தலைவர் அன்புவை சந்தித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது.

சவால்
நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி மீதும், சூர்யா படம் வெளியாகும் திரையரங்குகளை கொளுத்துவோம் என பேசிய காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் மீதும், அதை தூண்டும் வகையில் செயல்படும் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மணியமுதன் சொல்லும்போது, நடிகர் சூர்யா மீது விடுக்கப்படும் மிரட்டல் தமிழ்நாட்டுக்கு விடுக்கப்படும் சவால் எனவும், நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளோம் என்றார்.
Recommended Video

திராவிடர் கழகம்
சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டும், டைரக்டர் ரஞ்சித் உள்ளிட்ட ஒருசிலர் தவிர, முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் யாருமே அதற்கு கண்டனம் தெரிவிக்காத நிலையில், அரசியல் கட்சிகளும் பெரிதாக அந்த மிரட்டலை கண்டுகொள்ளாத நிலையில், திராவிடர் விடுதலை கழகம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதரவை தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications