சூர்ய வம்சம் பட ஸ்டைல்.. பயணிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வேற லெவல் பிளானை கையில் எடுத்த எஸ்இடிசி
சென்னை: தமிழகத்தில் தொலைதூரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்இடிசி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சாதாரண நாட்களில் பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த 13 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான அதிர்ஷ்டசாலி பயணிகள் பெயர்களை அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தொலை தென் மாவட்டங்கள் உள்பட தொலை தூர பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில் நீண்ட துரம் செல்லும் இந்த பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாளில் சொந்த ஊர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து அதிகளவில் பயணிகள் சொந்த ஊருக்கு படையெடுக்கின்றனர். அந்த நாட்களில் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அன்றைய தினம் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் அதிகமாக இருக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் முகூர்த்த தினத்திற்கு முந்தைய நாளும் சென்னையில் இருந்து நெல்லை, மதுரை என பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.
வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதினாலும் இதர நாட்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது. வேலை நாட்களில் தனியார் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் குறைவாக உள்ளன. இதனால், ஆம்னி பஸ்களிலும் கணிசமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில், தான் வார நாட்களிலும் அரசு பேருந்துகளில் பயணிகள் பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் மாதம் சாதாரண நாட்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 13 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. அடுத்த 10 பயணிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஜுன்-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் பதிமூன்று (13) பயணிகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் (மு.கூ.பொ) டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார். இது தொடர்பாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் ஜனவரி-2024 முதல் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில், ஜூன்-2024 முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- மும், இதர பத்து பயணிகளுக்கு தலா ரூ.2,000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைபடுத்தும் வகையில், -2024 மாதத்திற்கான பதிமூன்று (13) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் (மு.கூ.பொ) டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (01.07.2024) தேர்வு செய்தார். அதன் விவரங்கள் கீழ்வருமாறு:
N. பிரவீன், F. முபாஷீர், B. செல்வகுமார் ஆகியோருக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும். M. பிரவீன்,வேல்முருகன், நவீன் குமார், S. பிரதீப், V. வெல்ஜின் நிஜோ, S. பிரசன்னா, P. கண்ணன், M. ஜெய்நுல், P. முருகன், ரேவதி ஆகியோருக்கு ரூ.2000 விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications