காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரை குடித்தால் உடலில் ஏற்படும் மேஜிக்.. மருத்துவர் சொன்ன தகவல்
சென்னை: ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நாம் தண்ணீர் குடித்தால் அது உடலுக்குப் பல்வேறு வழிகளிலும் நன்மையைக் கொடுக்குமாம். இப்படிச் சுடு தண்ணீரைக் காலையில் குடிக்கும்போது என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பது குறித்த தகவல்களை மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
உடலைப் பத்திரமாகப் பராமரிக்க நாம் பல்வேறு விஷயங்களைச் செய்கிறோம். ஆனால், ஒரு சின்ன விஷயம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளைக் கொடுக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அது வேறு எதுவும் இல்லை.. வெறும் வயிற்றில் சுடு தண்ணீரைக் குடிப்பது தான் அது.

மருத்துவர் தகவல்
காலை வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் அருந்துவது ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மையைக் கொடுக்குமாம். இதுபோல வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பது செரிமானம், ரத்த ஓட்டத்தைச் சீர் செய்ய உதவும். அத்தோடு மன அழுத்தத்தையும் குறைப்பது உள்ளிட்ட கூடுதல் நன்மைகளையும் தருவதாக மெடிக்கல் நியூஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது..
மருத்துவ நிபுணர் டாக்டர் ஜான் வாலன்டைன் இது தொடர்பான தகவல்களைத் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதன் நன்மைகளை விளக்கினார். அந்த வீடியோவில் அவர் இதுபோல சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மூன்று முக்கியமான நன்மைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நன்மைகள்
1. முதலில் டிடாக்சேஷன்.. காலையில் இதுபோல சுடு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உடலில் டிடாக்சேஷன் நடக்கும். தேவையில்லாத பொருட்கள் வெளியே தள்ளப்படும். சுடு தண்ணீர் உடலில் உள்ள அமைப்பைத் தூண்டி, நச்சுக்களை வெளியேற்றி, சக்திவாய்ந்த இயற்கையான நச்சு நீக்கும் செயல்முறையைத் தூண்டும் என அவர் தெரிவித்தார்.
2. அடுத்து உடல் கொழுப்புக் குறைப்பு.. சுடு தண்ணீர் குடிப்பது உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. தினமும் சுடு தண்ணீர் அருந்தினால்.. மூன்றாவது நாளிலிருந்தே, உடலில் சேமிக்கப்பட்டுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைய ஆரம்பிக்குமாம்.. சுடு தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
உடல் மேம்படும்
3. உடல் செயல்பாடுகள் மேம்படவும் ஆரம்பிக்கும். ஒரு வாரம் தொடர்ந்து இதுபோல வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் அருந்தும்போது, ரத்த ஓட்டம் மேம்படும். ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்தம் திறமையாகப் பாயும், ஊட்டச்சத்துகள் விரைவாகச் சென்று, வளர்சிதை மாற்றக் கழிவுகள் திறன்பட வெளியேற்றப்படும் என டாக்டர் ஜான் தெரிவித்தார்.
இதுபோல தினசரி சுடு தண்ணீர் குடிக்கும்போது உடல் ஆரோக்கியமடையும்.. செரிமான அமைப்பும் மேம்பட்டும் என்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சுடு தண்ணீர் செரிமான நொதிகளை (digestive enzymes) தூண்டிவிடும். இதனால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்து அதிகளவில் நமது உடலால் உறிஞ்சப்படும். மேலும், வாயுத்தொல்லையும் கூட மேம்படும்!
ஒற்றைத் தலைவலி போகும்
நீர்ச்சத்து குறைபாடு அல்லது தசை இறுக்கத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்குச் சுடு தண்ணீர் இயற்கையான மருந்தாகச் செயல்படும். மேலும், தொடர்ந்து சுடு தண்ணீரைக் குடிக்கும்போது குடிப்பதால், தெளிவான சருமம், பொலிவான நிறம் ஏற்படும். முகத்தில் முதுமை ஏற்படுவதும் தடுக்கப்படும். இப்படி வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சுடு தண்ணீர் எல்லாவற்றையும் மாற்றும்" என்று அவர் தெரிவித்தார்.
இது சாதாரணச் செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications