நடுத்தெருவில் உட்கார்ந்து.. கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் பிடித்த தயாநிதி மாறன்!
மத்திய சென்னையில் தயாநிதி மாறன் குடிநீர் விநியோகம் செய்தார்
Recommended Video
சென்னை: நடுத்தெருவுல உட்கார்ந்து தயாநிதி மாறன் குழாயில தண்ணி பிடிச்சிட்டு இருந்தார். இதை பார்த்ததும் பொதுமக்கள் திக்குமுக்காடி போய்விட்டனர்!
மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்டவர் தயாநிதி மாறன். வழக்கம்போல வாரிசுக்கு சீட் கிடைத்துவிட்டதே என்ற ஆதங்கம் பொதுமக்கள் தரப்பில், ஏன் திமுகவிலும் எழவே செய்தது. இதற்கு எதிராக களமிறக்கப்பட்டவர் பாமக சார்பில் சாம்பால் ஆவார்.
இதுபோக முஸ்லீம் தொகுதி என்பதால், பிற கட்சிகளின் இஸ்லாமிய வேட்பாளர்களும் களம் இறங்கினர். ஆனால் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தயாநிதி மாறன்.

குடிநீர் பிரச்சனை
இந்நிலையில் நேற்று தொகுதி பக்கம் வந்தார். சென்னையில் எக்கச்சக்கமாக தண்ணி பஞ்சம் நிலவி வருகிறது. துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை போக்க, துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு 20 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.

பிளாஸ்டிக் குடங்கள்
இப்படி இலவசமாக குடிநீர் வழங்குவதற்கான தொட்டியை திறந்து வைக்கதான் தயாநிதி வந்திருந்தார். எல்லா வீடுகளுக்கும் பிளாஸ்டிக் குடங்கள் வழங்க ஏற்பாடு செய்தார். அது மட்டுமில்லை, டேங்க் பக்கத்திலேயே ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொண்டார்.

நெகிழ்ச்சி
வரிசையாக குடங்களை தூக்கி வந்த பெண்களுக்கு நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீர் விநியோகமும் செய்தார். காரிலிருந்து இறங்கி வந்து, பெரிய வீட்டு பிள்ளை இப்படி தங்களுக்காக தண்ணீர் பிடித்து தருவதை பார்த்து அந்த பகுதி மக்கள் நெகிழ்ந்து விட்டார்கள்.

பிரச்சாரம்
ஆனால் தயாநிதி இப்படி திடுதிப்பென்று குழாயில் தண்ணீர் பிடித்து தர இன்னொரு காரணமும் உள்ளது. பிரச்சார சமயத்தில் இந்த தொகுதியில் வந்து பேசிய அன்புமணி ராமதாஸ், சும்மா இல்லாமல் தயாநிதி மாறனை சீண்டி விட்டு போனார்.

அன்புமணி ராமதாஸ்
அப்போது அவர் பேசும்போது, "இதே மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாரே..தயாநிதி மாறன்.. அவர் யார் தெரியுமா? இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவரான கலாநிதி மாறனின் தம்பிதான். அவரோடு அப்பா முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த முரசொலிமாறன். கருணாநிதியின் பேரன். அதனால், எப்படி செல்வாக்கோடு வளர்ந்திருப்பார் என்று எண்ணி பாருங்கள். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் இவர்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

பதிலடி
இவர் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்? அவர் வீடு சென்னை போர்ட் கிளப்பில் உள்ளது. அவர் வீட்டு பக்கம்கூட பொதுமக்களால் செல்ல முடியாது. அவ்வளவு சீக்கிரம் இவர்களை அணுக முடியாது" என்று தொகுதிக்குள் ஒரு இடம் பாக்கி இல்லாமல் சொல்லி விட்டு போனார். இப்போது இதைத்தான் தயாநிதி மாறன் உடைத்து போட்டுள்ளதுடன், அன்புமணிக்கும் நோஸ்கட் கொடுத்துவிட்டு போனார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications