போதைப்பொருள் வழக்கு.. ஹைகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மேல் முறையீடு! ஜாமீன் கிடைக்குமா?
சென்னை: தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே ஜாமீன் கேட்டு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை கோர்ட் தள்ளுபடி செய்திருந்தது.
தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23 ஆம் தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அடுத்த 3வது நாளில் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். நடிகர்கள் இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் பார்ட்டி வைத்ததாகவும், இந்த பார்ட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் சில நடிகர்கள், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரதீப் குமார், ஜான், கெவின் ஆகிய 4 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க திட்டமிட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் அவர்கள் 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து இன்று பயாஸ் அகமது என்பவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தொடர்பான உரையாடல்களை கைப்பற்றி பிரதீப் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இதில் பயாஸ் அகமதுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளனர்.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவர் சார்பிலும் ஜாமீன் கேட்டு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பு அளித்த மனுவில், "மனுதாரர் மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானது. போலீசார் குற்றம்சாட்டுவது போன்று அவர் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. மனுதாரரை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். கைது செய்து 4 மணி நேரத்துக்கு பிறகு மனுதாரருக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவருக்கு போலீசாரால் உணவு, தண்ணீர், காபி மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரரை வழக்கில் சிக்க வைக்க ஏதேனும் சந்தேகப்படும்படியான பொருள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் நடிகர் கிருஷ்ணா தரப்பிலும், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து நேற்று முன் தினம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் தற்போது நடிகர் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications