சென்னை அழைத்து வரப்படும் போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக்.. சிக்க போகும் தலைகள்!
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படலாம் என தெரிகிறது.
டெல்லி, தமிழகம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் போதை பொருட்களை கடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி போதை பொருள் வழக்கில் கைதான 3 பேரின் தகவலை அடுத்து ஜாபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்று டெல்லியில் வைத்து ஜாபரை கைது செய்தோம்.

போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருக்கிறது. இதுவரை 3 ஆண்டுகளில் 3500 கிலோ சூடோபெட்ரின் எனும் போதை பொருட்களை ஜாபர் கடத்தியுள்ளார்.
போதை பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை வைத்து மங்கை என்ற படத்தை தயாரித்துள்ளார். உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு போதைக் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை ஜாபர் வழங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுவரை திருவனந்தபுரம், மும்பை ஜெயப்பூரில் பதுங்கியிருந்துள்ளார். போதை பொருள்களை கடத்தியதன் மூலம் சம்பாதித்த பணத்தில் சென்னையில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்துள்ளார். விசாரணைக்கு பிறகு ஜாபருடன் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடுவோம்.
சர்வதேச கும்பலுடனும் ஜாபருக்கு தொடர்பிருக்கிறது. தமிழகத்தில் சினிமா பிரமுகர்களுடனும் சாதிக்கிற்கு தொடர்பிருப்பதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இவர் 2019ஆம் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடத்தலில் வந்த பணத்தின் மூலமாக பயனடைந்தவர்கள் பட்டியலை தனித்தனியாக விசாரணை செய்யவும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர் விரைவில் சென்னைக்கு அழைத்து வரப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு போதை பொருள் வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களின் பட்டியலை அதிகாரிகள் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications