சிக்கிய போதைப்பொருள் சப்ளையர் பயாஸ் அகமது.. நடிகர்களுக்கு டிரக் சப்ளை செய்த வழக்கில் மீண்டும் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூளைமேட்டில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் டிரக் சப்ளையர் பயாஸ் அகமது என்பவர், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தொடர்புடைய போதைப் பொருள் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த் கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Drug Supplier Fayas Ahmed Re-Arrested in Drug Case Linked to Actors Srikanth and Krishna in Chennai

இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். காவல் துறை தரப்பில் இரண்டு பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவரின் ஜாமீன் மனுக்களையும் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருட்களை விநியோகம் செய்த வழக்கில் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப் பொருள் சப்ளை செய்த பிரதீப் குமாரிடம் நடத்திய விசாரணையில், பயாஸ் அகமது என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை சூளைமேட்டில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பயாஸ் அகமது என்பவர், நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாஸ் அகமது, போதைப்பொருள் சப்ளையராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர் பலரும் போதைப்பொருட்களை சப்ளை செய்திருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

பயாஸ் அகமது - பிரதீப் குமார் இருவருக்கும் இடையே போதைப் பொருள் தொடர்பான தகவல்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள், செல்போன் உரையாடல்கள் பண பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+