தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில்! இரு கார்கள் மோதி விபத்து! தந்தை, கர்ப்பிணி மகள் பலி
சென்னை: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை அனகாபுத்தூரில் மதுபோதையில் எதிர்திசையில் தவறாக வந்த கார் நேருக்கு நேர் மற்றொரு கார் மீது மோதிக் கொண்ட விபத்தில் தந்தையும், கர்ப்பிணி மகளும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. தாயும், டிரைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை அனகாபுத்தூர் மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று இரவு, போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் பத்மநாபன் என்பவர் அவருடைய மனைவி, கர்ப்பிணி மகளுடன் பயணம் செய்தார்.

காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். மணிகண்டன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் என்ன செய்கிறோம் என தெரியாமல் எதிர்திசையில் தவறான பாதையில் காரை ஓட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது அவ்வழியாக வந்த கார் மீது மணிகண்டன் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த பத்மநாபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.
அவரது மகள் 3 மாத கர்ப்பிணி தீபிகா (23), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பத்மநாபனின் தாய் இந்திராணி (51), மற்றொரு கார் ஓட்டுநர் புவனேஷ் (21) காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications