எங்க அப்பா யாரு தெரியுமா.. போதையில் காரை ஓட்டி வந்த நபர் அலப்பறை.. நைசாக பேசி போலீஸ் செய்த சம்பவம்
சென்னை: சென்னை நந்தனத்தில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த இளைஞர், போலீசாரிடம் மிரட்டும் தொனியில் என் அப்பா யார் தெரியுமா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இரவு நேரத்தில் போக்குவரத்து விதி மீறல்கள் அதிகம் நடப்பதை காண முடிகிறது. அவ்வப்போது சில இளைஞர்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக மின்னல் வேகத்தில் பைக்கில் சீறிப்பாய்வது.. மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்வது என போக்குவரத்து விதிமீறல்களில் சில வாகன ஓட்டிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மோட்டார் வாகன விதிகளை இஷ்டத்திற்கு மீறி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காக போக்குவரத்து போலீசார் முக்கியமான சாலைகளில் நின்று வாகன ஓட்டிகளை கண்காணிப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று சென்னை நந்தனம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய நபர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீசார் கேட்ட போது, அந்த நபர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை படம் பிடித்த செய்தியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. ஹூ ஆர் யூ மேன்.. என இஷ்டத்திற்கு செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பி கேமராவை தட்டி விட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூலாக சிரித்தபடியே.. இதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்த அந்த நபரிடம் போதையில் ஓட்டி வந்ததற்காக அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்தனர்.

ஆனால், நான் தான் அபராதம் கட்டிவிட்டேனே.. காரை எடுத்துட்டு போறேன் என போலீசாரிடம் அடம் பிடித்தார். போலீசாரோ.. அப்படியெல்லாம் போக முடியாது.. கார் சாவியை கொடுங்கள் என கெஞ்சாத குறையாய் அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால், அந்த நபரோ, என் அப்பா யாரு தெரியுமா.. டிபென்ஸ் ஆபிசர் என போலீசாரை மிரட்டும் விதமாக பேசினார்.
தொடர்ந்து விசாரித்ததில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த அந்த நபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராபின் சிங் என்பதும் நட்சத்திர ஓட்டலில் பார்ட்டியில் கலந்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது போலீசிடம் சிக்கியதும் தெரியவந்தது. காரை போலீசார் பறிமுதல் செய்த பிறகு ஆட்டோவை பிடித்து அந்த நபர் வீட்டிற்கு கிளம்பினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications