நீ என்ன பெரிய இவனா... அமைச்சர் முன்னிலையில்... நிருபர்களை அடிக்கப்பாய்ந்த அதிகாரி!
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் செய்தியாளர்களை அரசு அதிகாரி அடிக்கப்பாய்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவரை செய்தியாளர்கள் படம் எடுத்துக்கொண்டிருந்த போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் முத்துலிங்கம் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்றுகொண்டிருந்தார்.

இதனால் சார், சார், கொஞ்சம் தள்ளி நில்லுங்க என செய்தியாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர். அப்போது யாரை தள்ளச் சொல்கிறாய், நீ என்ன பெரிய இவனா என ஒருமையில் பேசியதோடு தன்னை தள்ளச் சொன்ன செய்தியாளர்களை அடிக்கப்பாய்ந்தார். மதுபோதையில் அவர் இருப்பதை அறிந்த அமைச்சர் செங்கோட்டையன் அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து உயர் அதிகாரிகள் முத்துலிங்கத்தை விழாவில் இருக்கவேண்டாம், உடனடியாக கிளம்புங்கள் என விரட்டியடித்தனர். இருப்பினும் உதவி செயற்பொறியாளர் முத்துலிங்கம் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி 15-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மது அருந்திவிட்டு அரசு விழாவிற்கு வர என்ன தைரியம் என லெட்ப் அண்ட் ரைட் வாங்கினாராம். மேலும், முத்துலிங்கத்தை இடைநீக்கம் செய்யவும் அவர் கேட்டுக்கொண்டாராம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications