மண்டைக்கேறிய போதை.. கிச்சனுக்கு ஓடிய கருவாடு வியாபாரி.. போதை தெளிந்ததுமே அழுகை.. சென்னையில் பரபரப்பு
சென்னை: போதையில் ஒரு குற்றத்தை செய்துவிட்டு, போதை தெளிந்ததுமே கதறி கதறி அழுதுள்ளார் சென்னையை சேர்ந்த ஒரு கருவாட்டு வியாபாரி.. இது தொடர்பான விசாரணையை போலீசார் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது?
சென்னை மணலி பல்ஜிபாளையம் அப்பாராஜி தெருவை சேர்ந்தவர் மகாராஜா.. 58 வயதாகிறது.. கருவாடு வியாபாரம் செய்பவர் மகாராஜா.. வீடு, வீடாக சென்று கருவாடு விற்பனை செய்பவர்.

இவரது மனைவி பெயர் சவுந்தரவள்ளி.. 51 வயதாகிறது.. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர்கள் தனித்தனியாக அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடைசி மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.. இதற்காக மாப்பிள்ளை பார்க்கும் பணியில் தீவிரமாக பெற்றோர் இருவருமே ஈடுபட்டனர். எனினும், சொந்தத்தில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றும் ஒரு யோசனை தம்பதிக்கு இருந்து வந்துள்ளது. இதுசம்பந்தமாக நேற்றிரவும் தம்பதி பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், அப்போது குடிபோதையில் இருந்துள்ளார் மகாராஜா.
திருமண பேச்சு: திருமண விஷயத்தை பேசிக் கொண்டிருந்போதே, தம்பதிக்குள் திடீரென பிரச்னை ஏற்பட்டுள்ளது... ஒருகட்டத்தில் போதை அதிகமாகி, மகாராஜா கடுமையான வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
அவர் போதையில் இருப்பது தெரிந்தும் சவுந்தரவள்ளி பதிலுக்கு பதில் பேசியிருக்கிறார்.. "என் மகளை, என்னுடைய சொந்தத்தில்தான் கட்டிக்கொடுப்பேன்" என்று முரண்டு பிடித்துள்ளார்..
உச்சக்கட்ட ஆத்திரம்: இதனால் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த மகாராஜா, கிச்சனிலிருந்த கத்தியை எடுத்துவந்து மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டார்.. தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் கடுங்கோபத்தில் வெட்டினார்.. இதனால் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து துடித்தார் சவுந்தரவள்ளி. இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால், அதற்குள் சவுந்தரவள்ளி பரிதாபமாக இறந்துவிட்டார்.
சிறிதுநேரம் கழித்து சவுந்தரவள்ளியின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மகாராஜா, கதறி அழுதார்.. பின்னர் கொலை செய்த கத்தியுடன் மணலி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்து, வீட்டில் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, சவுந்தரவள்ளியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கண்ணீர் கதறல்: இதனிடையே போதை இறங்கியதும் மகாராஜா போலீசாரிடம் கதறி கதறி அழுதிருக்கிறார்.. "சார், ஆத்திரத்தில் கொன்றுவிட்டேன்.. தெரியாமல் செய்துட்டேன்.. நான் ஜெயிலுக்கு போய்விட்டால் என் குழந்தைகள் அனாதையாகி விடுவார்களே" என்று கண்ணீர் வடித்து சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டதும் போலீசார் அவரை சமாதானம் செய்தனர். பிறகு, மகாராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications