வரலாறு காணாத வரி குறைப்பு செய்த மோடி அரசு! இரண்டே அடுக்கில் ஜிஎஸ்டி! தமிழக தொழில்துறைக்கு பொற்காலம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, "ஒரே நாடு, ஒரே வரி" என்ற கோட்பாட்டைச் செயல்படுத்தும் வகையில், GST வரி அமைப்பை சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு எளிமைப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றங்கள், நான்கு அடுக்கு வரி முறையை நீக்கி, எளிய இரட்டை அடுக்கு முறையை (5% & 18%) அறிமுகப்படுத்துகின்றன. இந்திய பொருளாதாரத்தில் இது ஒரு மிகப்பெரிய சீர்திருத்தமாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
புதிய GST அமைப்பு, குடும்பங்களின் அன்றாடச் செலவுகளில் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பால், தயிர், பன்னீர், உலர் பழங்கள், சாக்லேட், பிஸ்கட் போன்ற பொருட்கள் மீதான வரி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டிவி, ஏசி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைகிறது. ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான வரி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்படுவதால், ஒரு நடுத்தரக் குடும்பம் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாயைச் சேமிக்க முடியும்.
தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், சோப்பு, பற்பசை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 18% வரி, தற்போது 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளுக்கு இது ஒரு பெரும் நிவாரணமாக அமையும். சிக்கலான வரி நடைமுறைகளிலிருந்து அவர்களுக்குச் சுமை குறைக்கப்பட்டுள்ளது. 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு GST வரி, இனி 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக எளிமையாக்கப்பட்டுள்ளது. வரி திரும்பப் பெறும் செயல்முறை விரைவுபடுத்தப்படுவதுடன், பல்வேறு படிவங்கள் மற்றும் தகவல் அளிக்கும் சுமை குறைகிறது. இந்த வரிக்குறைப்பு, சிறு வணிகர்களுக்கும் MSME துறைக்கும் பெரும் ஊக்கமளிக்கும்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், எண்ணற்ற வரிகள் (எக்சைஸ், VAT, சர்வீஸ் வரி, என்ட்ரி டேக்ஸ்) இருந்தன. மாநில வாரியாக வேறுபட்ட வரி விகிதங்கள் நடைமுறையில் இருந்தன. இது வணிகர்களுக்குக் கடினமான நடைமுறைகளையும், முறைகேடுகளுக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது.
மோடி அரசு, "ஒரே நாடு, ஒரே வரி" என்ற கொள்கையைச் செயல்படுத்தி, 99% பொருட்களை 5% வரி அடுக்குக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் வரி எளிமையாக்கப்பட்டு, சுமை குறைந்துள்ளது. தற்போதைய GST நடைமுறை, தெளிவான, வெளிப்படையான மற்றும் உலகத் தரமான வரி முறையாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் முக்கியத் துறைகளுக்கு இந்த மாற்றம் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஜவுளித் துறையில், பஞ்சு, நூல், துணி உற்பத்தியாளர்களுக்கு வரி குறைப்பு, ஏற்றுமதி போட்டித்திறனை அதிகரிக்கும். திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மையங்களுக்கு இது நன்மை பயக்கும். தோல் மற்றும் காலணித் துறையில், காலணிகள் மற்றும் தோல் பொருட்களின் வரி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதால், ஆம்பூர், வேலூர் பகுதி தொழிலாளர்களுக்கு நல்ல செய்தியாகும். மீன்வளத் துறையில், கருவாட்டுக்கு வரி விலக்கு தொடர்வதுடன், மீன்பிடி உபகரணங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில், சிறிய கார்கள், இருசக்கர வாகனங்கள் மீதான வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால், சென்னை, ஓசூர் தொழில்முனைவோருக்கு நல்ல காலம் பிறக்கிறது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை "சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்" என்ற கருத்தை முழுமையாகப் பறைசாற்றுகிறது. காங்கிரஸ் அரசின் குழப்பமான, ஊழலுக்கு வாய்ப்புள்ள வரி முறைக்கு எதிராக, பாஜக அரசு எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட ஒரு வரி முறையைக் கொண்டு வந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார எதிர்காலம் மட்டுமல்ல, தமிழகத்தின் பொருளாதார எதிர்காலமும் பிரகாசமாகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications