Dude பட பாடல் விவகாரம்.. இளையராஜாவுடன் பட தயாரிப்பு நிறுவனம் சமரசம்.. வழக்கு முடித்து வைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: Dude பட பாடல் விவகாரம் தொடர்பாக இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதேபோல் இளையராஜாவுக்கு டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டதாலும், இரு தரப்பும் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டதாலும் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிப்பில் வெளியான டியூட் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின், 'கருத்த மச்சான்' பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

dude-movie-song-controversy-ends-as-ilaiyaraaja-producers-agree-to-settle

டியூட் திரைப்படம்

ரவி மோகனின் கோமாளி படத்தை இயக்கி பிரபலமானவர் நடிகர் பிரதீப். தொடர்ந்து லவ் டுடே படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு அந்த படமும் ஹிட் அடித்தது. பின்னர் டிராகன் படமும் அவருக்கு ஹிட் அடித்தது. இதையடுத்து தான் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி டியூட் படம் வெளியானது. இந்த படத்தில், 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்றிருந்த, 'கருத்த மச்சான்' மற்றும் 'பணக்காரன்' படத்தில் இடம் பெற்றிருந்த '100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்' ஆகிய பாடல்கள் வந்தன.

2 பாடல்களையும் நீக்க வேண்டும்

மீண்டும் சோசியல் மீடியாக்களில் இந்த பாடல்கள் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் தனது அனுமதியின்றி இந்த பாடல்கள் பட தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்தியதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் மேற்கூறிய 2 பாடல்களையும் நீக்க வேண்டும். தனது இசையில் அமைந்த பாடல்களை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடலை உருமாற்றி இருக்கிறார்கள். பாடலுக்கான உரிமை தங்களிடம் இருக்கிறது" என வாதிடப்பட்டது.

படத்தின் டைட்டில் கார்டில்

பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும் சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்று இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், "இளையராஜாவுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டது. படத்தின் டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதை இளையராஜா தரப்பு வக்கீல் ஒப்புக்கொண்டார். இரு தரப்பும் சமரசம் அடைந்ததை அடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+