சென்னையில் பல முக்கிய பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.. காரணம் என்ன தெரியுமா! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்ரோ பணிகளால் சென்னையில் நாளை முதல் சில முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பைப் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையில் இப்போது 2ஆம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கே பல முக்கிய சாலைகளில் போக்கு வரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.

 Due to Chennai metro construction major traffic changes announced in city from tomorrow

இதற்கிடையே நாளை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு, ஆர்.கே.மட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாகப் போக்குவரத்து போலீசார் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்: இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக ஆர்.கே.சாலை மெட்ரோ நிலையம், திருமயிலை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தைவெளி மெட்ரோ நிலையங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகள் 07.01.2024 முதல் மூடப்படும்.

பகுதி 1: ராயப்பேட்டை ஹை ரோடு (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை)
பகுதி 2: ஆர்.கே.மட் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை )
பகுதி 3: ஆர்கே மட் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை) எனவே, மேற்கண்ட சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காகப் பின்வரும் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிச்சு உதறப்போகும் கனமழை.. தமிழகம் முழுக்க மெகா சம்பவம் காத்திருக்கு.. வானிலை மையம் அலர்ட்

அதன்படி பகுதி 1இல் GRH பாயிண்டில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி ராமன் சாலை - வலது - நீதிபதி ஜம்புலிங்கம் தெரு - வலது - ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்பட்டன. ராயப்பேட்டை ஹை ரோட்டிலிருந்து GRH நோக்கி வரும் வாகனங்கள் - ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை- இடது நீலகிரிஸ் கடை - மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை - வலது - TTK சாலை - கௌடியா மட சாலை வரை செல்லும்.

வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை), வி.எம்.தெரு, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாகச் செயல்படும். அஜந்தா சந்திப்பில் இருந்து அ.தி.மு.க. கட்சி அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பகுதி 2: ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹை ரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும் - வலது லஸ் சர்ச் சாலை- டி 'சில்வா சாலை - பக்தவச்சலம் தெரு- வாரன் சாலை- செயின்ட் மேரி சாலை - இடதுபுறம் திரும்பி - சி.பி இராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ஆர்.கே.மட் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹைரோடு நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) – இடதுபுறம் - ரங்கா சாலை - வலது - கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ - லஸ் சர்ச் சாலை வழியாக - பி.எஸ்.சிவசாமி சாலை - வலது - சுலிவன் கார்டன் தெரு - இடது - ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.

கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர்.ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு, லஸ் அவென்யூ 1வது தெரு, லஸ் அவென்யூ, முண்டககன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும். சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மட் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.

மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மட் சாலை வழியாக புறப்படும் MTC மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம்- மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை – இடதுபுறம் திரும்பி - தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாக செல்லலாம்.

பகுதி 3: வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி - செயின்ட் மேரிஸ் சாலை - இடதுபுறம் திரும்பி - சிபி ராமசாமி சாலை - காளியப்பா சந்திப்பு - நேராக ஆர்ஏபுரம் 3 வது குறுக்குத் தெரு சென்று - காமராஜர் சாலை - ஸ்ரீநிவாசா அவென்யூ - கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர் கே மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே.மட்ட சாலை - இடது - திருவேங்கடம் தெரு - திருவேங்கடம் தெரு விரிவாக்கம் - வி.கே. ஐயர் சாலை - தேவநாதன் தெரு - வலது - செயின்ட் மேரிஸ் சாலை - இடது – ஆர். கே மட சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மந்தைவெளி செல்லும் MTC பேருந்துகள் - வாரன் சாலை இடதுபுறம் - செயின்ட் மேரிஸ் சாலை - வலதுபுறம் திரும்பி - சிருங்கேரி மட சாலை மற்றும் VK ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம். ஸ்ரீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன், பள்ளி சாலை ஆகியவை ஒருவழிப்பாதையாக செயல்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+