சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெருங்கும் புரேவி புயல்.. காரைக்காலில் வெளுக்கும் மழை.. அனைத்து ஆறுகளையும் கண்காணிக்க அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: புரேவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.

Recommended Video

    நெருங்கும் புரேவி புயல்.. காரைக்காலில் வெளுக்கும் மழை - வீடியோ

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் காரணமாக தென் மாவட்டஙகளி பரவலாக மழை பெய்து வருகின்றது அந்தவகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மிதமாக பெய்து வந்த மழை தற்போது கனமழையாக பெய்து வருகின்றது இதன் காரணமாக மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

    Due to cyclone Burevi, rain lashes Karaikal

    தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டஙகளில் கடைமடைப்பகுதியில் உள்ளது காரைக்கால், ஆகவே, தமிழக மாவட்டஙகளில் பெய்யும் மழைமழை நீர் காரைக்காலில் உள்ள நண்டலாறு, அரசலாறு, திருமலைராயனாறு உள்ளிட்ட 6 ஆறுகளின் வழியாக கடலில் கலக்கின்றது இந்நிலையில் அனைத்து ஆறுகளையும் கண்காணிக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

    Due to cyclone Burevi, rain lashes Karaikal

    இதனிடையே அரக்கோணத்தில் இருந்து 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் காரைக்காலில் முகாமிட்டுள்ளனர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அனைத்து மீன்பிடி படகுகளையும் பாதுகாப்பாக மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    English summary
    Due to cyclone Burevi, rain lashes Karaikal, rivers are under gvt watch.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X