இந்தியா - பாகிஸ்தான் போர்.. மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம் வந்தாச்சு.. ஐடி ஊழியர்களுக்கு போன மெசேஜ்
சென்னை: இந்திய ஐடி மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தங்களின் பல நிறுவன கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்த தொடங்கி உள்ளன. இந்தியா-பாகிஸ்தான் மோதல் தீவிரமடைந்ததால், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனால் ஏற்கனவே வடஇந்தியாவில் வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து WFH பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி-NCR மற்றும் நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள சில நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே WFH வேலை வழங்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் உள்ள ஒரு சில ஐடி நிறுவனங்கள், மும்பையில் உள்ள ஐடி நிறுவனங்கள், குருகிராமில் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு WFH கொடுத்துள்ளது.
டெலாய்ட், கேபிஎம்ஜி, ஈஒய், எச்சிஎல்டெக், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. மற்ற ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் WFH ஆப்ஷனை இந்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பயணிக்க வேண்டாம்
அத்தியாவசியமற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களை ஒத்திவைக்குமாறும் ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. எல்லை மாநிலங்களில் பணியில் இருக்கும் நபர்கள் வேறு இடங்களில் இருந்து வேலை பார்க்க விரும்பினால் அதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமும் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமுமான HCLTech தனது சண்டிகர், குருகிராம் மற்றும் நொய்டாவில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் WFH அறிவித்து உள்ளது.
கணக்கியல் நிறுவனமான EY இந்தியா சார்பாக டெல்லி NCR, சண்டிகர், ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு WFH செய்ய அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மேற்கண்ட அறிவிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக வழங்கப்படும் WFH வசதிகள் மட்டுமே. நீண்ட கால வசதி கிடையாது.
போர் அபாயம்
இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் மூண்டு உள்ளது. வியாழன் இரவு மற்றும் வெள்ளி அதிகாலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடித்தது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
நேற்று இந்த தாக்குதல்களில் இந்திய எல்லைக்குள் அதாவது ஜம்மு மற்றும் பஞ்சாப் உள்ளே நுழைய முயன்ற ஒரு AWACS விமானம் காலி செய்யப்பட்டது. பாகிஸ்தானின் 3 விமானங்கள் நேற்று ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன . இரண்டு F-16 விமானங்கள் மற்றும் ஒரு JF-17 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் AWACS விமானம் ஒன்றும் காலி செய்யப்பட்டது. இதனால் மிகப்பெரிய அளவில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications