சென்னையில் இன்று 5 மணிநேரம் ‛பவர் கட்’.. காலை 9 மணிக்கு மேல் மின்சாரம் இருக்காது.. மக்களே கவனம்
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. எந்தெந்த இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது என்பது பற்றிய பட்டியல் மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார விநியோகம் என்பது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தங்கு தடையின்றி மின்சாரம் சப்ளை செய்யும் வகையில் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நாளில் குறிப்பிட்ட அந்த பகுதியில் அறிவிக்கப்பட்ட மின்தடை என்பது ஏற்படுத்தப்படும்.

அந்த வகையில் இன்று சென்னையில் பல இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சென்னையில் இன்று (03.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், திருமுல்லைவாயல், ரெட் ஹில்ஸ், ஆவடி, புழல், பெரம்பூர், பல்லாவரம், வடபெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்: அன்னை அபிராமி நகர், கோலடி ரோடு, அன்பு நகர், விஜிஎன் அப்பார்ட்மென்ட், மகாலட்சுமி நகர், தேவி கருமாரியம்மன் நகர், தேரோடும் வீதி, நொளம்பூர், கம்பர் சாலை, 1வது பிளாக், 2வது பிளாக், முகப்பேர் மேற்கு மெயின் ரோடு, ரெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் மின்விநியோகம் இருக்காது.
திருமுல்லைவாயல் - ரெட் ஹில்ஸ்: ஆர்ச் அந்தேணி நகர், பொத்தூர், இன்டஸ்டரீஸ், ரெட்ஹில்ஸ் பகுதியை பொறுத்தமட்டில் பம்மதுகுளம், எல்லம்மன் பேட்டை, அன்னை இந்திரா நினைவு நகர், அம்பேத்கர் நகர், வீரபாண்டி நகர் நாகத்தம்மன் நகர், இஜீ நகர், ஆவடியை பொறுத்தவரை தென்னிலை, பெரியமுல்லைவாயல், அருமந்தை, கிருதலாபுரம், புதூர், மாரம்பேடு, ஆங்காடு பகுதிகளில் இன்று மின்தடை ஏற்பட உள்ளது
பெரம்பூர்: செம்பியம், காவேரி சாலை 1 முதல் 8 வது தெரு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, செம்பியம் மவதும், பெரம்பூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர் முழுவதும் ஜிஎன்டி சாலை, காந்தி நகர் முழுவதும், பெரம்பூர் முழுவதும், பிபி சாலை, மாதவரம் பகுதி, மாதவரம் நெடுஞ்சாலை பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
பல்லாவரம்: கிருஷ்ணா நகர், இரட்டை பிள்ளையார் கோவில், ஏழுமலை நகர், எச்எல் காலனி, சிக்னல் ஆபிஸ் ரோடு, பம்மல் நல்லத்தம்பி ரோடு, தேவதாஸ் தெரு, கக்கன் தெரு, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, அண்ணாநகர் 4வது மெயின் ரோடு, 7 வது குறுக்கு தெரு, 3வது மெயின் ரோடு, காந்தி ரோடு, ராதாகிருஷ்ணன் தெரு, லட்சுமி நாராநயணன் நகர் 2வது தெரு, நாஞ்சிலால் தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சப்ளை செய்யப்படாது.
வடபெரும்பாக்கம்: சின்னசாமி நகர், எம்எம்டிஏ 1வது பிரதான சாலை 1வது பகுதி, ஒமகுலம் தெரு, சக்தி நகர், நேரு நகர், பெருமாள் கோவில் தெரு, டெலிகாம் நகர், பெரிய மாத்தூர், புது நகர், மஞ்சம்பாக்கம், அச்சிஸ் நகர், அகர்சன் கல்லூரி ரோடு உள்ளிட்ட இடங்களிலும் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications