Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டம்மியாகும் வைகை எக்ஸ்பிரஸ்.. வந்தே பாரத்துக்காக வம்பு செய்யும் ரயில்வே! இனி இவ்வளவு லேட்டா போகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மையில் சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் அதிவேக ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில், அதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் அதிகரிக்கப்படுவது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

46 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையையும் சென்னையையும் இணைக்கும் ரயிலாக இயங்கி வந்தது வைகை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ். தென் மாவட்ட மக்களின் உணர்வில் கலந்த இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக மதுரை மற்றும் சுற்றுவட்டார தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு பயணித்து வந்தார்கள்.

Due to Vande Bharat the travel timing of the Vaigai Express train increased

இந்த நிலையில், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலால், வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் பயணிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பிரதமர் மோடி கடந்த 24 ஆம் தேதி 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

அதில், திருநெல்வேலி - மதுரை - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயிலும் அடக்கம். இதில் சென்னை - மதுரை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலால் தற்போது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

வைகை எக்ஸ்பிரஸ் காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 7:15 மணி நேரம் பயணித்து பிற்பகல் 2.25 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் பிற்பகல் 1:50 க்கு சென்னையில் இருந்து புறப்படும் வைகை, 7:25 மணி நேரம் பயணித்து மதுரைக்கு இரவு 9:15 மணிக்கு சென்றடைகிறது.

இந்த நிலையில்தான், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றி பயண நேரத்தை மேலும் 15 நிமிடங்கள் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் காலை 6.40 மணிக்கெல்லாம் மதுரையிலிருந்து புறப்பட்டு 7:30 மணி நேரம் பயணித்து பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் சென்னையில் இருந்து பிற்பகல் 1:50 க்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், 7:40 மணி நேரம் பயணித்து இரவு 9:30 மணிக்கே மதுரை சென்றடையும் என்று கூறப்படுகிறது.

Due to Vande Bharat the travel timing of the Vaigai Express train increased

வரலாற்று சிறப்பு மிக்க இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி உயர் வகுப்பு தொடங்கி, முன்பதிவற்ற பெட்டிகள் வரை ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் மதுரை - சென்னை இடையே பயணித்து வந்தனர். 46 வது பிறந்தநாளை கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸின் பயண நேரத்தை 7 மணி நேரமாக குறைக்க வேண்டும் என பயணிகள் கோரி வந்தனர்.

இந்த நிலையில் ஏழைகளால் எளிதில் செல்ல முடியாத அதிக கட்டண ரயில் சேவையான வந்தே பாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வைகை எக்ஸ்பிரஸின் பயண நேரத்தை அதிகரிப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நேரம் மாற்றம் அக்டோபர் 1 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டாலும், தற்போதே தாமதமாக இயக்கப்படுவதாகவும், கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸுக்காக திருச்சி ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+