"ஸ்டாலின் வந்துட்டாரு".. துள்ளி குதித்து ஓடிவந்த கூட்டம்.. அச்சு அசல் டிட்டோ.. திகைத்த திருப்பத்தூர்
ஸ்டாலின் போல வேடமிட்ட நபரால் திருப்பத்தூரில் ஆச்சரியம் ஏற்பட்டது
சென்னை: முதல்வர் ஸ்டாலின்தான் வர்றாரு என்று நினைத்து திருப்பத்தூர் மக்கள் ஏமாந்து விட்டனர்.. இறுதியில் ஆச்சரியப்பட்டு போன அம்மக்கள், டூப் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Recommended Video
ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகள், ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் வருகிற 19--ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

திமுக
அந்த வகையில் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன.. இந்த பிரச்சாரங்களில் சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில் திமுக தரப்பில் ஒரு ஆச்சரியமூட்டும் சம்பவம் நடந்துள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குப்பம்மாள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டு வந்தனர்..

ஹேர்ஸ்டைல்
அப்போது முதல்வர் ஸ்டாலின் தான் வருகிறார் என்று பொதுமக்கள் ஏமாந்துவிடும் அளவுக்கு ஒரு நபர் அனைவரையும் கவர்ந்துவிட்டார். அச்சு அசல் ஸ்டாலின் போலவே இருந்தார்.. அதேபோல ஹேர்ஸ்டைல், கூலிங்கிளாஸ், ஒயிட் & ஒயிட் டிரஸ் என முதல்வர் போலவே கைகளை அசைத்து நடந்து வந்தார்.. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஒரு கணம் ஏமாந்துவிட்டனர்..

ஆச்சரியம்
ஸ்டாலின்தான் நம் பகுதியில் வாக்கு கேட்டு வருகிறார் என்று நினைத்து அந்த நபரை நோக்கி ஓடி வந்தனர்.. பிறகுதான் விஷயம் தெரிந்தது.. ஸ்டாலின் போல வேடமிட்ட அந்த நபரை உற்சாகத்தோடு வரவேற்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இரட்டைமலை சீனிவாசன் தெரு, தென்றல் நகர், நரசிங்கராவ் காலணி, உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று டூப் ஸ்டாலினும் வாக்கு சேகரித்தார்.

அடிப்படை
இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் தார் சாலை தெருவிளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என்று வாக்குறுதி அளித்து ஸ்டாலின் செய்த சாதனைகளை விளக்கி கூறி இந்த நபர் வாக்குகளை சேகரித்தார்.. அப்போது அவருக்கு ஆதரவாக ஏராளமான திமுகவினர் மற்றும் 1 வார்டு இளைஞர்களும் திரண்டு உடன் சென்றனர். பொதுமக்கள் டூப் ஸ்டாலினுடன் எடுத்து கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications