பட்டென மயங்கி விழுந்த துரை தயாநிதி.. பதறிய அழகிரி.. கோபாலபுரம் பரபரப்பு.. துரை தயாவுக்கு என்னாச்சு
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன், துரை தயாநிதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சைகள் நடந்து வருவதாக தெரிகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 36 வயதாகிறது.. இவர் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்... இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாக தகவல் வெளியானது.. இதனால், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பரிசோதனைகள்: அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அடுத்தடுத்த சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, அடுத்த சில நாட்களுக்கு துரை தயாநிதிக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். துரைக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.. பிறகு, அண்ணன் அழகிரியிடமும் இதை பற்றி விசாரித்துள்ளார்..
என்ன நடந்தது: துரை தயாநிதி சென்னை வீட்டில் இருந்தபோது, நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்... இதைப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சில டெஸ்ட்கள் எடுக்கப்பட்டதாகவும், அந்த மருத்துவ பரிசோதனை முடிவில், அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்தன.
அதாவது, மூளைக்கு செல்லும் ரத்த நரம்புகளில் அடைப்பு இருப்பதால், இது பிரைன் அட்டாக் என்று சொல்லப்படுகிறது.. ஆனால், இதுகுறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை. துரை தயாநிதிக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையும் இன்னும் வெளிவரவில்லை. அப்படி வெளிவந்தால் மட்டுமே அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து உறுதியாக தெரியவரும்.
அழகிரி: நேற்றைய தினம், துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, மதுரையில் இருந்த அழகிரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகுதான், மதுரையில் இருந்து அவர் கிளம்பி வந்துள்ளார்..
நேற்று மயங்கி விழுவதற்கு முன்புவரை, சென்னையில் வெள்ளம் தொடர்பான ட்வீட்டுக்கு, துரை தயாநிதி ரீட்வீட்களை செய்துள்ளார்.. அத்துடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் செய்து கொண்டிருந்தார்.. அப்போதுதான், திடீரென மயங்கி விழுந்துள்ளதாக சொல்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications