மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் வீடு திரும்பினார்
நெஞ்சுவலி காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
Recommended Video

சென்னை: திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொருளாளர் துரைமுருகன், தீவிர சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அழுகையோ, சிரிப்போ எல்லாமே இவருக்கு ஒன்றுதான். வெளிப்படையான இவரது குணம் அனைவரையுமே ஈர்க்கக்கூடிய ஒன்று.
நிறைய உணர்ச்சி வசப்பட்டாலும், இவரிடம் ஹியூமர் சென்ஸ்தான் அதிகம். எப்போதுமே கலகல பேச்சுதான், கலகல பேட்டிதான். சட்டசபையில் இவரது பேச்சுக்கென்றே அனைத்து கட்சிகளிலும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மிஸ்டர் துரைமுருகன்...
ஒருமுறை சட்டசபையில் ஜெயலலிதா எதிரே வந்த துரைமுருகன் வணக்கம் கூற, அப்போது ஜெயலலிதாவோ, "மிஸ்டர் துரைமுருகன்... உங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கு. அரசியலுக்கு வராமல் சினிமாவில் வந்திருந்தால் நீங்க ஒரு நல்ல நடிகனா வந்திருப்பீங்க" என்றார்.

உணர்ச்சிவசப்பட்டார்
அந்த அளவுக்கு கலகல துரைமுருகன் நேற்று மனம் கலங்கி கதறி அழுதுவிட்டார். சபையில் கருணநிதிக்கு இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தும்போது, நிறையவே உணர்ச்சிவசப்பட்டு பேசினார். நா தழுதழுக்க அவரால் பேச முடியாமல் ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டார். அவரை பக்கத்தில் இருந்த ஸ்டாலின் போன்றவர்கள் ஆசுவாசப்படுத்தி, ஆறுதல் சொன்னார்கள்.

தீவிர சிகிச்சை
இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது. இதனால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் நெஞ்சுவலி
ஏற்கனவே தனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்ததை நேற்றுகூட அவையில் சொன்னார் துரைமுருகன். தனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர் கலைஞர்தான் என்றார். எனவே மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சையும் தீவிரமாக நடைபெற்றது.

வீடு திரும்புவார்கள்
இரு தினங்களுக்கு முன்பு பேராசிரியர் அன்பழகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, துரைமுருகனும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். திமுகவின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து சுகவீனமாகி வருவது அக்கட்சியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், சிகிச்சை முடிந்து இருவருமே விரைவில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தன.

டிஸ்சார்ஜ்
அதன்படியே தீவிர சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். துரைமுருன் வீடு திரும்பியதை கேள்விப்பட்டதும், கலக்கத்தில் இருந்த திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications