பாஜக - மதிமுக கூட்டணியா? வைகோவுடன் யாரும் பேசவில்லை.. அடித்து சொன்ன துரை வைகோ!
சென்னை: பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மதிமுக எம்பி துரை வைகோ உறுதியாக கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அவரின் அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.முருகன், செப்டம்பரில் திமுக கூட்டணி உடையும். திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் பாஜக கூட்டணி விரிவடையும். இந்த கட்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி தான். புதிதாக வரவிருக்கும் கட்சிகள் யார் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.

வாஜ்பாய் ஆட்சியில் பாஜகவுடன் இருந்த கட்சி என்று எல்.முருகன் கூறியதால், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா என்ற கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், எல்.முருகன் கூறிய கருத்து உண்மை தான். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று கூறினார்.
அப்போது மதிமுக உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, இப்போது விரிவாக எதையும் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார். திமுக கூட்டணியை பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, முஸ்லீம் லீக் என்று அனைத்து கட்சிகளும் இணக்கமாக உள்ளன.
தற்போது அந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது இணைந்து கொண்டது. திமுக ஆட்சி மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை எந்த கட்சியும் கூட்டணியில் இருந்து விலகவில்லை. இந்த நிலையில் எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் கருத்து குறித்து மதிமுக எம்பி துரை வைகோ விளக்கம் கொடுத்துள்ளார்.
அதன்படி துரை வைகோ பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி குறித்து நூற்றுக்கு நூறு சதவிகிதம் எதுவும் பேசவில்லை. கூட்டணி தொடர்பாக வைகோவும் பாஜகவுடன் பேசவில்லை என்பதும் உறுதி. நயினார் நாகேந்திரன் பேசியது அவரின் அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் எல்.முருகன் கூறியது எந்த கட்சி என்ற விவாதம் நடந்து வருகிறது.
அதேபோல் திமுக கூட்டணியை பிரிப்பதில் பாஜக தீவிரமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விசிகவை கூட்டணியில் இருந்து பிரிக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப இன்னொரு பக்கம் விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications