வைகோ மகனின் 7 வருடக் கனவு! 3 வருட முயற்சி! 1 வருட உழைப்பு! 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் தயார்!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பற்றிய ஆவணப்படம் 'மாமனிதன் வைகோ' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
வைகோ மகன் துரையின் 7 வருடக் கனவு, 3 வருட முயற்சி, 1 வருட உழைப்பில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று சென்னையில் வைத்து வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வைகோ ஆவணப்படம்
அரசியல் பொதுவாழ்வில் வைகோ அடியெடுத்து வைத்து 56 ஆண்டுகள் ஆகிய நிலையில் 'மாமனிதன் வைகோ' என்ற பெயரில் அவர் குறித்து வரலாற்று ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வரை தமிழக உரிமைகளுக்காகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் வைகோ குரல் கொடுத்து முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைகோ மகன்
தனது தந்தை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது துரை வைகோவின் 7 வருடக் கனவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்றாண்டுக் கால முயற்சியில் ஒரு வருட உழைப்பில் இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார். மேலும், அந்த விழாவில் பங்கேற்குமாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் துரை வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்.

வரலாற்றுச் சிறப்பு
இந்தி எதிர்ப்பு போராட்டம், சீமைக்கருவேல மரங்கள் அகற்றம், காவிரி நதி நீர் உரிமை பாதுகாப்பு நடைபயணம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், ஈழத்தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம், மூவர் தூக்குக்கு தடை பெற்றது, நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மதுவிலக்கு நடைபயணம், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு, என வைகோ தம் பொதுவாழ்வில் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

துரை வைகோ
துரை வைகோ உருவாக்கியுள்ள 'மாமனிதன் வைகோ' ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி ஒட்டுமொத்த இந்திய அரசியலும் மதிமுகவையும், வைகோவையும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் துரை வைகோ.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications