"ஸ்டாலின் மிசாவில் கைதானது உண்மைதான்.. ஆனால் 100% அரசியல் காரணம் இல்லை.." துரை வைகோ பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டாலின் மிசா விவகாரம் தொடர்பாக இப்போது பெரிய விவாதமே நடந்து வருகிறது. இதற்கிடையே ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைதானது உண்மைதான் என்றாலும் அது 100% அரசியல் காரணங்களுக்காக இல்லை என கூறி மதிமுக எம்பி துரை வைகோ சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மிசா குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. முதல்வர் விஜய் இது தொடர்பாக சட்டசபையில் பேசியிருந்ததே இந்த சர்ச்சையை தொடங்கி வைத்தது. அதேபோல அக்கட்சியின் அமைச்சர் நிர்மல் குமாரும் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை.. வேறு வழக்கில் கைதானார் என கூறியது பரபரப்பை கிளப்பியது.

Durai Vaiko on Stalin MISA Arrest Durai Vaiko Stalin MISA

துரை வைகோ

இதற்கிடையே மதிமுக முதன்மை செயலாளரும் எம்பியுமான துரை வைகோவும் இது தொடர்பாக சில கருத்துகளை கூறியிருக்கிறார். அதாவது மிசாவில் திமுகவில் இருந்து முதலில் கைதானவர் வைகோ தான் என்று குறிப்பிட்ட அவர், ஸ்டாலினும் அந்த காலகட்டத்தில் கைதானார் என்பது உண்மை தான் என்றாலும் அது 100% அரசியல் காரணங்களுக்காக இல்லை என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "மிசா பொறுத்தவரை அன்றைய தமிழ்நாட்டில் திமுகவில் இருந்து கைதான முதல் நபர் வைகோ தான். கடைசியாக விடுதலை செய்யப்பட்ட நபரும் வைகோ தான். இது ஒரு வரலாற்று உண்மை. மிசா சட்டத்தில் கைதான பலரும் உயிரிழந்துள்ளனர். மிசா காலகட்டத்தில் கைதாகி ரொம்ப சங்கடப்பட்டவர்கள்.. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் திமுகவில் இருந்து வெளியேயும் வந்துவிட்டனர்.

100% அரசியல் காரணம் இல்லை

இதுபோல மிசா சட்டத்தில் கைதான திராவிட இயக்க தலைவர்கள், பொதுவுடைமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்கும்போது, பழைய செய்தி குறிப்புகளை பார்க்கும்போது ஒன்று தெரிகிறது. இது யாரையும் முன்னெடுத்த நான் சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன். அரசியல் காரணத்திற்காகவும் அப்போது கைதுகள் நடந்தன. அதேநேரம் பிற காரணங்களுக்காகவும் அந்த நேரத்தில் கைதுகள் நடந்துள்ளன.

மிசா காலத்தில் அவர் கைதானது உண்மைதான். அதை நம்மால் மறுக்கவே முடியாது. ஆனால், என்ன காரணம்.. முழுமையான அரசியல் காரணமா என பார்த்தால் 100% கிடையாதுன்னு சொல்லுவேன். அதாவது மிசா காலத்தில் கைதானது உண்மைதான். ஆனால் அரசியல் காரணத்துக்காக தான் அவர் கைது செய்யப்பட்டாரா என்பது ஒரு மிக பெரிய ஒரு கேள்விக்குறி!

அரசியல் நாகரீகம்

அந்த காலகட்டத்தில் திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பலரும் கைதாகி சிறையில் இருந்தனர். பழைய கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் என்ன நடந்தது என கேட்டு பாருங்கள்.. அவர்கள் சொல்வார்கள். அரசியல் நாகரீகம் கருதி நான் இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், 100% அவர் அரசியல் காரணங்களுக்கா கைதாகவில்லை என்பதை நான் சொல்வேன்" என்றார்.

அனுதாபம் தேட முயற்சி

முதல்வர் விஜய் தாடையில் கை வைத்து பேசிய விவகாரம் தொடர்பாக அவர், "முதல்வர் விஜய் இது குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். எந்தவொரு தனிப்பட்ட நபரை குறிக்கும் வகையில் நான் எதையும் செய்யவில்லை என அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். என்னை பத்தி தான் சொன்னார் என இவர்களே திரும்ப திரும்ப சொல்லி அனுதாபம் தேட முயல்கிறார்கள். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அது குறித்து சட்டசபையில் விவாதிக்கலாம்.. தனிப்பட்ட விமர்சனங்களை கடந்து போய்விட்டு மக்கள் பிரச்சினை குறித்து விவாதியுங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+