இளைஞர்களை அரசியல்படுத்தும் விஜய்.. மனதார பாராட்டிய துரை வைகோ.. வேற லெவல் ட்விஸ்ட்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜய்யின் அரசியல் வருகை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியில் உள்ள சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார்கள் [Durai vaiko spoke about vijay].
காங்கிரஸில் உள்ள பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் விஜய்யை பாராட்டி வருகிறார்கள். திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவின் துரை வைகோ, விஜய் புதிய வாக்காளர்களை ஈர்க்கிறார். தமிழ்நாடு இளைஞர்களை அரசியல்படுத்துகிறார் என அவரின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார்.

இளைஞர்களை அரசியல்படுத்தும் விஜய்
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், "தவெக தலைவர் சகோதரர் விஜய்யின் அரசியல் வருகையை நல்ல விஷயமாக பார்க்கிறேன். மதவாத கட்சிகளை, சாதிய கட்சிகளை ஏன் எதிர்க்க வேண்டும் என்று அவர் பேசுவதை நான் வரவேற்கிறேன்.
அரசியல் புரிதல் இல்லை
இன்றைக்கு தமிழ்நாடு இளைஞர்களிடம் அரசியல் புரிதல் இல்லை. நம் இளைஞர்களுக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் பற்றி தெரிவதில்லை. அரசியல் புரிதல் இல்லாத இளைஞர்களை விஜய் அரசியல் மயப்படுத்துகிறார். இளைஞர்களிடம் மதவாத, சாதிய கட்சிகளுக்கு எதிரான மன நிலையை விஜய் உருவாக்குகிறார்.
புதிய வாக்காளர்கள்
பெரியார், அண்ணா, காமராஜர் போட்டோவை பார்த்தால் சில இளைஞர்களுக்கு தெரியும். போட்டோவை பார்த்தாலும் அவர்களை தெரியாத இளைஞர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களிடம் பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியேரை விஜய் கொண்டு சேர்க்கிறார். பெரியாரின் சாதனைகள், காமராஜரின் தியாகங்கள் ஆகியவற்றை விஜய் மூலமாக தெரிந்து கொள்கிறார்கள்.
இளைஞர்களிடம் மாற்றம்
விஜய் புதிய வாக்காளர்களை கொண்டு வருகிறார். தமிழ் இளைஞர்களிடம் இந்த மாற்றம் ஏற்படுவது நல்ல விஷயம். ஜனநாயகத்தில் நல்ல சித்தாந்தத்துடன் ஒரு இயக்கம் வருவது ஆரோக்கியமான ஒன்றுதான். தவெகவின் வெற்றி அந்தக் கட்சியின் தலைமையின் செயல்பாட்டை பொறுத்து அமையும்" என்று கூறியுள்ளார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications