பேசாமல் இருக்கிற ஆளுக்குத்தான் அந்த இடம் லாயக்கு.. ஆனால் நீங்களோ.. அப்பாவுவை கலாய்த்த துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேசாமல் இருக்கிற ஆளுக்குத்தான் அந்த இடம் லாயக்கு, அதுக்கே உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் என சபாநாயகர் அப்பாவுக்கு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டசபை நிகழ்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சபாநாயகர் அப்பாவுவை பாராட்டி துரைமுருகன் பேசியிருந்தார். அப்போது அவர் பேசுகையில் பேரவைத் தலைவர் அவர்களே உள்ளபடியே இந்த மன்றத்தை முதல்வரை, இங்கு நடந்த விதத்தை அற்புதமாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.

ஆனால் எங்களை பொருத்தவரையில் முதல்வர் சார்பில் சொல்கிறேன், நீங்கள் முதல்முறையாக இந்த மன்றத் தலைவர் பொறுப்பிலே உட்கார்ந்து இவ்வளவு சிறப்பாக நடத்துவீர்களா என்று நாங்கள் முதலில் கொஞ்சம் ஐயப்பட்டோம்.

தேர்ந்த அப்பாவு

தேர்ந்த அப்பாவு

ஆனால் "இப்போது தலைவர் அவர்கள் (அப்பாவு) எல்லாவற்றிலும் தேர்ந்துவிட்டார்" என முதல்வர் அடிக்கடி சொல்வார். காரணம் அந்த இடத்திலே உட்காருகிறவர்கள் முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் போன்று இருக்க வேண்டும். அவர் அதிகமாக பேச மாட்டார். யார் பேசாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த இடம் லாயக்கு.

பேசாமல் இருக்க வேண்டியிருக்கிறது

பேசாமல் இருக்க வேண்டியிருக்கிறது

ஆனால் நீங்களோ பெரிய பேச்சாளர். உங்களால் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமலும் இருக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்வது? ஆனால் பேசுகிற அந்த ஆவலை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தீர்களே அதற்கே உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள். அதுதான் சில நேரங்களில் உங்களுக்கு கை கொடுத்தது. அதுவே பலமாகவும் அமைந்துவிட்டது.

உட்காருங்கள்

உட்காருங்கள்

மற்றவர்கள் ஆர்டர் ஆர்டர் உட்காருங்கள் என்பார்கள். ஆனால் நீங்கள் பேசுபவர்களுடன் சேர்ந்து நீங்கள் அதைத்தான் பேச போகிறீர்கள், இதைத்தான் பேச போகிறீர்கள் என்று சொல்லியதற்கு உள்ளபடியே உங்களுக்கு பாராட்டுகள். நான் எத்தனையோ சபைகளை பார்த்திருக்கிறேன்.

போட்டி, தகராறுகள் இல்லை

போட்டி, தகராறுகள் இல்லை

கசா முசா என சண்டைகள் இல்லாமல், நீயா நானா என தகராறுகள் இல்லாமல் கட்டிக் காத்துள்ளீர்கள், அதற்கு முதல்வர் சார்பில் எல்லா எம்எல்ஏக்கள் சார்பில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு வரலாறை படைத்திருக்கிறீர்கள். ஆனால் அடுத்த முறை எங்களை இங்கே உட்கார வைக்காமல் (கலைவாணர் அரங்கம்) பழைய சட்டசபைக்கு (ஜார்ஜ் கோட்டை) அழைத்துச் செல்லுங்கள். அதுதான் முறை என துரைமுருகன் பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+