ஸ்டாலினை நாடாள அழைக்கும் காலம் வரும்! ஆசையை உருக்கமுடன் பகிர்ந்த அமைச்சர் துரைமுருகன்!
சென்னை: ஸ்டாலினை நாடாள வருமாறு அழைக்கும் காலம் விரைவில் வரும் என்றும் அவர் இந்திய திருநாட்டை ஆள்வதை தாம் பார்க்க வேண்டும் எனவும் கூறி தனது ஆசையை பகிர்ந்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
கருணாநிதியை தேடி குடியரசுத் தலைவர் பதவி வந்ததாகவும் ஆனால் எனது உயரம் எனக்குத் தெரியும் எனக் கூறி அந்தப் பதவியை அவர் விரும்பவில்லை எனவும் துரைமுருகன் பிளாஷ்பேக் கூறினார்.

தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையினுடைய 25-வது பொதுக்குழு மற்றும் பொன்விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சருக்கு முன்னதாக பேசிய திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஸ்டாலின் பிரதமராகும் காலம் விரைவில் வரும் என்பதை அவர் முன்னிலையிலேயே கூறினார்.
துரைமுருகனின் இந்த ஆசை குறித்து ஸ்டாலின் தனது பேச்சில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதைப்பற்றி எதுவும் குறிப்பிடாதது பிரதமர் பதவி மீது அவருக்கும் ஆர்வம் இருப்பதை உணர்த்துகிறது.
ஏற்கனவே ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என ஃபரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ள நிலையில் துரைமுருகனின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஓராண்டு கூட இல்லாத நிலையில், பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினை தான் முன்னிறுத்த வேண்டும் என்பதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இப்போதே சூசகமாக வெளிப்படுத்த தொடங்கிவிட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications