திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக முடிவு? பரபரப்பான அண்ணா அறிவாலயம்!
சென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உடல் நலக்குறைவு காரணமாக தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய துரைமுருகன் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. துரைமுருகன் விலகலுக்கு பின், திமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஜெகத்ரட்சகனுக்கு வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
திமுகவில் தலைவர் பதவிக்கு பின் மிகமுக்கியமான பதவி பொதுச்செயலாளர் பதவிதான். திமுக தொடங்கப்பட்ட போது, பெரியார் தான் என் தலைவர்.. அதனால் தலைவர் பதவி வகிக்க மாட்டேன் என்று திமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவர் அண்ணா. அதன்பின் மாற்றம் செய்யப்பட்டு தலைவராக கருணாநிதியும், பொதுச்செயலாளராக அன்பழகனும் இருந்தனர்.

அன்பழகன் மறைவுக்கு பின் அந்த பதவிக்கு துரைமுருகன் கொண்டு வரப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக துரைமுருகன் பொதுச்செயலாளர் செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக திமுகவில் நிர்வாகிகள் சிலர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர்.
அதாவது திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி மற்றும் முபெ சுவாமிநாதன் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தை வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரு மாவட்ட கழகமாக பிரிக்கப்பட்டது. இதன்பின் வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளராக ஏபி நந்தக் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
அதேபோல் வேலூர் வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார். துரைமுருகன் நீண்ட நாட்களாகவே கதிர் ஆனந்தை மாவட்டச் செயலாளராக கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்து வந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஸ்டாலினும் பொறுப்பை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் துரைமுருகன் திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. துரைமுருகன் விலகலைத் தொடர்ந்து, அந்த பொறுப்பை ஜெகத்ரட்சகனுக்கு வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் மேலும் 2 பேரை துணை பொதுச்செயலாளராக நியமிக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications