Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறு வயதில் தாயை இழந்த சகோதரிகள்.. அம்மாவாக மாறிய துர்கா ஸ்டாலின்.. நெகிழ்ச்சி பிளாஷ்பேக்

துர்காவின் தாயார் தனது மரணத்திற்கு முன்பாக காசிக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். சகோதரிகள் ஒன்றாக இணைந்து காசி, ஷீரடி சாய்பாபா கோவில்களுக்கு சென்று வந்திருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய தாயை சிறுவயதிலேயே இழந்ததால் சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருப்பார்கள். துர்கா ஸ்டாலின் அதீத கடவுள் பக்தி கொண்டவர். எங்கு சென்றாலும் தன்னுடைய சகோதரிகளுடன் செல்வார். அந்த அளவு கடந்த பாசத்தை தன்னுடைய சகோதரிகளின் மேலே வைத்திருந்தார். அம்மா இல்லாத சகோதரிகளுக்கு அம்மாவாக இருந்து பாசத்தை காட்டியுள்ளார் துர்கா ஸ்டாலின். ஒரு சகோதரியின் மறைவு துர்காவிற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரி சாருமதி சண்முகசுந்தரம். கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

Durga Stalin and Sisters: Durga Stalin who became a mother The story of Pasamalars

இந்தநிலையில், சகோதரிகளுக்கு இடையே பாசத்தை நாயகி டி.வி.,யின் செய்தியாளர் லோகநாயகி யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

சாருமதி தனது அக்கா துர்கா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர். தன்னுடைய அம்மாவாகவே துர்கா ஸ்டாலினை கருதியவர் சாருமதி. சிறிய தங்கை ஜெயந்தியும் துர்கா மீது நல்ல பாசமுடன் இருப்பவர். தங்கைகள் இருவரும் துர்கா மீது இவ்வளவு பாசம் வைக்க காரணம், சிறு வயதிலேயே அவர்கள் தாயை இழந்தது தான். துர்காவின் 9 ஆவது வயதில் அவரது தாயார் மரணமடைந்தார். இதனால் துர்கா தான் அவர்களை பார்த்துக் கொண்டார்.

இவர்கள் மூவரும் சகோதரிகள் என்பதைத் தாண்டி நல்ல தோழிகள். என்ன பிரச்சனை வந்தாலும் துர்காவிடம் பேசி தீர்வு காண்பது சாருமதி மற்றும் ஜெயந்தியின் பழக்கம். மூவரும் தினமும் 10 முறைக்கு மேல் போனில் பேசிக் கொள்வது வழக்கம்.

Durga Stalin and Sisters: Durga Stalin who became a mother The story of Pasamalars

2 வயது தான் மூத்தவர் என்றாலும், அக்கா துர்காவிற்கு மரியாதை கொடுப்பவர் சாருமதி. அதேபோல், ஸ்டாலினை அத்தான் என்று அழைப்பார் சாருமதி. சாருமதி கோவையில் திருமணம் செய்து கொண்டாலும் சென்னைக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார். கடந்த சில வருடங்களாக சென்னையில் தான் வாழ்ந்து வந்தார் சாருமதி. சென்னையில் இவரது கணவரும் தொழிலதிபராக இருந்து வருகிறார்

மூன்று சகோதரிகளில் சாருமதி மிகுந்த பக்தி கொண்டவர். அவர் போகாத கோயிலே கிடையாது. அனைத்து பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுவபர். மூன்று பேரும் எத்தனை பொறுப்புகள் வந்தாலும், சகோதரத்துவத்தை விட்டு கொடுத்ததில்லை. மூவரும் ஒன்றாக அடிக்கடி வெளியில் சென்று வருவார்கள், குறிப்பாக கோவிலுக்கு. அம்மாவின் ஆசைப்படி சகோதரிகள் காசிக்கும் சென்று வந்துள்ளனர்.

சாருமதி நன்றாக படிக்க கூடியவர் என துர்கா ஸ்டாலின் அடிக்கடி கூறியுள்ளார். அவர் டாக்டருக்கு படிக்க வேண்டியவர் என்றும் துர்கா கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டு காலம் தன்னுடனேயே பயணித்த இளைய சகோதரி சாருமதியின் மறைவு துர்க்கா ஸ்டாலினுக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்துள்ளது.

சிறுவயதிலேயே அம்மாவை இழந்தவர் துர்கா. அவரது இரண்டு சகோதரிகள் சாருமதி, ஜெயந்திக்கு அம்மாவாக, அக்காவாக, தோழியாக பயணித்தவர். சாருமதி போகாத கோவில் இல்லை என்று சொல்லலாம். பிரபலமான தெய்வங்களின் ஸ்லோகங்கள் எல்லாமே மனப்பாடமாக தெரியுமாம். பய பக்தியுடன் ஸ்லோகங்களை தன்னை மறந்து சொல்வார்கள்.

Durga Stalin and Sisters: Durga Stalin who became a mother The story of Pasamalars

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி இப்படி எல்லா பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை இப்படி மிக முக்கியமான பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கணவர்,குழந்தைகள், பேரன் பேத்திகள் என பெரிய அளவில் குடும்பங்கள் வளர்ந்த பின்னரும் சகோதரிகள் 3 பேரும் தங்களுக்கான நேரத்தை விட்டுக்கொடுத்தது இல்லை. அவ்வப்போது சகோதரிகள் ஒன்றாக சேர்ந்து அவ்வப்போது கோவில்களுக்கு சென்று வருவார்கள்.

சகோதரிகள் ஒன்றாக இணைந்து காசி, ஷீரடி சாய்பாபா கோவில்களுக்கு சென்று வந்திருக்கின்றனர். துர்காவின் தாயார் தனது மரணத்திற்கு முன்பாக காசிக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனை நினைவில் வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சகோதரிகள் மூவரும் இணைந்து காசிக்கு சென்று வந்திருக்கின்றனர். இளைய சகோதரி சாருமதியின் மறைவு துர்க்கா ஸ்டாலினை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டு வருவார் என்று நம்பலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+