சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
துர்கா ஸ்டாலின் சகோதரி உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரி சாருமதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
சகோதரியின் மறைவுச் செய்தியறிந்து துடிதுடித்துப் போன துர்காவுக்கு அவரது கணவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார்.
தனது சகோதரிகள் இருவர் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் துர்கா ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

துர்கா ஸ்டாலின் சகோதரி
முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி, ராஜமூர்த்தி என இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரர் உள்ளனர். தனது சகோதரர் மீதும் சகோதரிகள் இருவர் மீதும் துர்கா ஸ்டாலின் அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர். வெளியூர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்லும் போது தன்னுடன் எப்போதும் தனது இரண்டு சகோதரிகளில் ஒருவரையாவது உடன் அழைத்துச் செல்வார் துர்கா ஸ்டாலின்.

அன்பும் பாசமும்
யாருக்காகவும் எப்போதும் தனது சகோதரிகளை விட்டுக் கொடுக்காதவர் துர்கா ஸ்டாலின். இளம் வயதிலேயே தாயை இழந்ததால் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் அதீத பாசத்துடனும் வளர்ந்தவர்கள் இவர்கள். இதனிடையே துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி கோவையில் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டாலும் அவர் சென்னைக்கு குடிபெயர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இவரது கணவர் தொழிலதிபராக இருந்து வருகிறார்.

குடும்பத்தினர் ஆறுதல்
இதனிடையே கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வந்த சாருமதி, இன்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுச் செய்தியை அறிந்தவுடன் துர்கா ஸ்டாலின் துடிதுடித்துப் போய் கதறி அழுதிருக்கிறார். இதையடுத்து துர்கா ஸ்டாலினை அவரது கணவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் படுத்தி தேற்றியிருக்கின்றனர்.

முக்கியப் பிரமுகர்கள்
துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதியின் இறுதிச் சடங்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி உடலுக்கு முக்கியப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications