''சங்கிகள் முட்டாபயலுக என்றால் முதலில் நம்பமாட்டேன்! ஆனால் இப்போது..'' துர்கா ஸ்டாலின் தம்பி ஆவேசம்!
சென்னை: சங்கிகள் முட்டாபயலுக என்றால் முதலில் நம்பமாட்டேன் என்றும் ஆனால் அவர்கள் அடிமுட்டாள்கள் என்பதை இப்போது தான் உணர்ந்தேன் எனவும் கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார் துர்கா ஸ்டாலினின் தம்பி ராஜமூர்த்தி.
முதலமைச்சர் ஸ்டாலினின் மைத்துனரும், துர்கா ஸ்டாலினின் தம்பியுமான மருத்துவர் ராஜமூர்த்தி பரபரப்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இருதய பரிசோதனை நடத்திய இ.எஸ்.ஐ. மருத்துவர்களுக்கும், தனக்கு துளியும் சம்பந்தமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

செந்தில்பாலாஜிக்கு இருதய பரிசோதனை நடத்த சென்ற இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து சென்றவர்கள் என்றும் அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடியது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அம்மருத்துவமனையின் டீனாக இருப்பவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தாம் இ.எஸ்.ஐ.யில் இயக்குநராக பணியாற்றினாலும் தனது நிர்வாகத்தின் கீழ்7 மருத்துவமனைகள் மட்டுமே வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமது நிர்வாகத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளில் இருதய சிகிச்சை பிரிவே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மை நிலவரம் இப்படியிருக்க யாரோ 2 பேர் யூடியூப் சேனலில், செந்தில்பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த இ.எஸ்.ஐ. மருத்துவர்களை அனுப்பியதே தாம் தான் என்று கூறுவது அவதூறானது, புரளியானது எனக் கூறினார். செந்தில்பாலாஜிக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் கூறியதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தன்னை பற்றி அவதூறாக யூடியூபில் பேசியவர்கள் ஒருத்தனுக்கு பிறந்திருந்தால் அதை நிரூபிக்க வேண்டும் எனவும் சவால் விடுத்தார்.
மேலும், பரதேசி என்றும் கூறி தனது உள்ளக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார் அவரது வீடியோ பதிவில். மக்களும் அவதூறுகளை பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் நல்ல நல்ல விஷயங்களை பற்றி பேசினால் 2,000 பேருக்கு மேல் யாரும் பார்ப்பதில்லை என்றும் புரளிகளை தான் அதிகம் பார்க்கிறார்கள் எனவும் நொந்துகொண்டார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications